Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
25 ஆகஸ்ட் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

முத்திரை போடப்பட்டவர்கள்

“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்.”

— எபேசியர் 1:13

“நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல; விலைக்கிரயமாக வாங்கப்பட்டவர்கள்.” -Billy Graham

எபேசியர் 1:13-ன் படி, ஒரு மனிதன் தேவனுடைய பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்படுவதற்கு மூன்று முக்கிய படிகள் உள்ளன:

தேவனுடைய வார்த்தையாகிய இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்கும் போது விசுவாசம் உருவாகிறது.

கேட்ட சுவிசேஷத்தை உணர்ந்து, இயேசுவே இரட்சகர் என்று முழு இருதயத்தோடு நம்புவது.

விசுவாசித்த கணமே, தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்கு அளித்து நம்மைத் தம்முடைய சொந்தமாக முத்திரை போடுகிறார்.

ஒரு பொருளின் மீது முத்திரையிட்டால் அது இன்னாருக்கு உரியது என்பது உறுதியாகும். அதுபோல, பரிசுத்த ஆவியின் முத்திரை நாம் தேவனுக்குச் சொந்தமான பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த முத்திரை வெளியில் காணக்கூடிய அடையாளம் அல்ல; அது நம்முடைய உள்ளத்தில் தேவனால் பதிக்கப்படும் ஆவிக்குரிய அடையாளம்.

பரிசுத்த ஆவி நம்முள் வாசம் செய்து, நம்மை வழிநடத்துகிறார், பாவத்தைக் குறித்து உணர்த்துகிறார், பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறார், சோதனைகளில் பெலப்படுத்துகிறார், கிறிஸ்துவைப் போல வாழ நம்மை மாற்றுகிறார்.

ஆகவே, பரிசுத்த ஆவியின் முத்திரை என்பது வெறும் “நான் இரட்சிக்கப்பட்டவன்” என்ற உரிமைகோரல் அல்ல; “நான் தேவனுக்குச் சொந்தமானவன்; எனவே என் வாழ்க்கையும் தேவனுக்குரியதாக இருக்க வேண்டும்” என்ற பொறுப்பையும் உணர்த்துகிறது.

உலகம் நம்மைப் பார்த்து, “இவர் யாருக்குச் சொந்தமானவர்?” என்று கேட்கும்போது, நம்முடைய வாழ்க்கையே “நான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன்” என்று பதிலளிக்க வேண்டும்.

ஜெபம்

1. மகாராஷ்டிரா மாநில அருட்பணி களங்களில் நிலம் வாங்கி ஆலயங்கள் கட்டப்பட வேண்டும்…

2. அருட்பணி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருட்பணியாளர்கள் கிடைக்கப்பெற…

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878