Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
24 ஆகஸ்ட் 2026 திங்கள் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

நினைவு கூருவோம்: எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்?

“சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?”

— ஆதியாகமம் 16:8

நாம் எங்கிருந்து மீட்கப்பட்டோம் என்பதை நினைவுகூரும்போது மட்டுமே, தேவனின் கிருபைக்கு நன்றி உள்ளவர்களாக வாழ முடியும்.

— பெனின்

நமது வாழ்வில் நாம் எங்கிருந்து வந்தோம், இப்போது எங்கே நிற்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியமானது.

ஆதியாகமம் 16-ஆம் அதிகாரத்தில், ஆஹார் தன் எஜமானியாகிய சாராயை அலட்சியம்பண்ணி, வனாந்தரத்திற்குத் தப்பியோடியபோது, கர்த்தருடைய தூதன் அவளை நோக்கி, "சாராயின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?" என்று கேட்டார்.

அந்த ஒரு கேள்வி அவள் ஒரு காலத்தில் சாராயின் அடிமையாக இருந்தவள் என்பதை அவளுக்கு நினைவூட்டியது. அவளது கடந்த காலத்தையும், தற்போதைய நிலையற்ற தன்மையையும் உணர வைத்தது. ஓடி ஒளிவது தீர்வல்ல, ஆண்டவரின் சமூகத்திலும், அவர் நியமித்த இடத்திலும் கீழ்ப்படிந்து வாழ்வதே ஆசீர்வாதம் என்பதை அவள் உணர்ந்தாள். அதேபோல், உபாகமம் 26-ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளும்போது, தங்களின் கடந்த கால எகிப்திய அடிமைத்தனத்தையும், கர்த்தர் தங்களை எப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து அற்புதமாக விடுவித்து, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு வழிநடத்தி வந்தார் என்பதையும் அறிக்கையிட வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். நம்முடைய கடந்த கால பலவீனங்கள், அடிமைத்தனங்கள் மற்றும் காயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு காலத்தில் நமது சமூகம் மிகக் கொடூரமான சாதிய அடக்குமுறைகளிலும், கல்வி மறுப்பிலும், கடுமையான கட்டுப்பாடுகளிலும் ஒடுக்கப்பட்டிருந்தது. மனித மாண்பற்று வாழ்ந்த அந்த இருண்ட காலத்தில், கிறிஸ்து இயேசுவின் அன்பை ஏந்திவந்த மிஷனரிகளின் தியாகமிக்க ஊழியமே நம்மை அந்த அடிமைத்தன நுகத்தடியிலிருந்து மீட்டெடுத்தது. கல்வி, சமத்துவம், கண்ணியம், மற்றும் ஆவிக்குரிய விழிப்புணர்வை மிஷனரிகள் வழியே நமக்குத் தந்து, தேவன் நம்மை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார். இன்று நாம் அனுபவிக்கும் சுயமரியாதையும், உயர்வும், கிறிஸ்துவில் பெற்ற ஆன்மீக வாழ்வும் மிஷனரிகள் மூலம் கர்த்தர் நமக்கு அளித்த மாபெரும் விடுதலைப் பரிசாகும். நாம் எங்கிருந்து மீட்கப்பட்டோம் என்பதை ஆணித்தரமாக நினைவில் வைக்கும்போதுதான், தேவனுக்குச் செலுத்த வேண்டிய நன்றியுணர்வு நம்மிடம் என்றும் குறையாமல் இருக்கும். நமது வரலாற்றை மறக்காமல், தேவன் தந்த இந்த விடுதலையின் வெளிச்சத்தை அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து எடுத்துச்செல்வோம். கர்த்தர் நம்மை அழைத்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்போம். ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று நினைத்த இடங்களில்கூட அவர் புதிய வழியையும், புதிய பலனையும், அற்புதங்களையும் தந்திருக்கிறார். கடந்த காலத்தில் அவர் செய்ததை நினைவுகூர்வதே, இன்றைய சோதனைகளை வெல்லும் விசுவாசத்தின் பலம்.

ஜெபம்

1. நமது மிஷனரி பணிகளை பல நிலைகளில் தாங்கும் அருட்ப பணி பங்காளர்களுக்காக…

2. இன்று நமது மிஷனரிகளால் செய்யப்படும் அனைத்து ஊழியங்களுக்காக..

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878