Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
18 ஆகஸ்ட் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

ஆற்றுதலும் தேற்றுதலும் நமது பணி

“என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்”

— ஏசாயா 40:1

"கடவுள் நமக்குத் தருவது வெறும் வார்த்தை ஆறுதல் அல்ல, நம் துயரத்தில் அவரே நம்மோடு இருப்பதுதான் மெய்யான ஆறுதல்." — சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis)

இன்றைய உலகின் மிகப்பெரிய சவாலே மனிதர்களை ஆட்டிப்படைக்கும் மன அழுத்தமும், கவலைகளும், எதிர்பாராமல் தாக்கும் இயற்கை பேரிடர்களின் கண்ணீரும்தான். வெற்று வார்த்தைகளாலோ, அறிவுரைகளாலோ அல்லாமல், இயேசுவின் அன்பினாலும் நம் தியாகத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் கரங்களைப் பிடிப்போம்.

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். 2 கொரிந்தியர் 1:4

என்ற புனித பவுல் அடிகளாரின் ஆணித்தரமான ஆறுதலின் விசுவாசத்தின் படி இறைவனால் தேற்றப்பட்ட நாம், பிறரைத் தேற்றும் கருவிகளாக மாற வேண்டும். மிஞ்சியதைத் தருவதை விட, உள்ளதைப் பகிர்ந்து கொள்வதே நிஜமான ஆறுதல்.

புனித அன்னை தெரசா கூறியது போல, "நாம் மிகப்பெரிய காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை; சிறிய காரியங்களை மிகப்பெரிய அன்போடு செய்தாலே போதும். பல்வேறு கவலைகளாலும் மன அழுத்தத்தாலும் நொந்துபோன மனிதர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துத் தாங்குவோம்.

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 34:18) என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைப்போம்.

நம் துயரத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த ஆறுதலை, கண்ணீரில் வாடும் மனிதர்களுக்குக் கொண்டு சென்று, அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும் சந்தோஷத்தையும் விதைப்போம்.

ஜெபம்

இன்றைய உலகின் மிகக் கொடூரமான வியாதியே மன அழுத்தம் மன அழுத்தத்தாலும் பல வித இழப்புக்களாலும் வாழ்வில் ஆறுதல் இல்லாமல் தவிக்கின்ற மக்கள் மெய்யான ஆறுதலை காண ஜெபிப்போம்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878