Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
19 ஆகஸ்ட் 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

ஆன்மீகத் தாகம்

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.”

— வெளிப்படுத்தின விசேஷம் 21:6

“இயேசு கிறிஸ்து மட்டுமே ஆத்துமாவின் தாகத்தைத் தீர்க்கும் வற்றாத ஜீவ ஊற்று." - டி.எல். மூடி

"ஜெபம் என்பது தாகமுள்ள ஆத்துமா ஜீவத்தண்ணீரின் ஊற்றை நோக்கி எடுக்கும் ஓட்டம்.” -ஜான் கல்வின்

இன்றைய அதிவேகமான நவீன சமூகத்தில் நமது ஓட்டமும் தாகமும் எதை நோக்கி இருக்கிறது? பணம், பதவி, தொழில் வளர்ச்சி, சமூக ஊடகப் புகழ், நவீன வசதிகள் என உலகியல் காரியங்களை நோக்கியே மனம் நாள்தோறும் அலைபாய்கிறது. இவற்றுள் எல்லாவற்றையும் அடைந்துவிட்டாலும்கூட, மனதின் ஆழத்தில் ஓர் இனம்புரியாத வெறுமையும் வறட்சியும் தொடரவே செய்கிறது. உலகம் தரும் தற்காலிகச் சந்தோஷங்கள் கடல் நீரைப் போன்றவை; அதைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகரிக்குமே தவிர, ஆத்துமாவுக்கு ஒருபோதும் உண்மையான நிறைவைத் தருவதில்லை. நாம் எதன் மீது தாகமாய் இருக்கிறோமோ அதுவே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆண்டவரின் நீதியையும் அன்பையும் உண்மையோடு தேடுகிற ஒரு ஆத்துமா ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை. சங்கீதக்காரன் இந்த ஆத்தும ஏக்கத்தைப் அழகாக விவரிக்கிறார் "மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது." சங்கீதம் 42:1 ஒரு காய்ந்துபோன வனாந்தரத்தில் நீர்நிலையைத் தேடி மான் எப்படித் தவிக்குமோ, அதேபோல்தான் இறைவனின் பிரசன்னம் இல்லாத மனித வாழ்வும் வறண்டு போகிறது. இயேசு கிறிஸ்து "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" - யோவான் 7:37 என்று வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். உலகியல் காரியங்களை நோக்கி ஓடுவதை நிறுத்திவிட்டு, இறைவனின் பாதத்தில் நம் ஆத்துமாவைத் தாழ்த்தும்போதுதான் உண்மையான நிறைவு தொடங்குகிறது. நீதியின் மீதும் இறை பிரசன்னத்தின் மீதும் தாகமாக இருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் அவர் ஒருபோதும் வெறுமையாக அனுப்புவதில்லை.

நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நடக்கச் செய்கின்ற ஆண்டவரிடம் சரணடைவோம் அவர் நம்மை நடத்துவார்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878