Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
8 ஆகஸ்ட் 2026 சனி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

இருதயம்: ஜீவ ஊற்றின் பிறப்பிடம்

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”

— நீதிமொழிகள் 4:23

உங்கள் இருதயத்தை தேவனிடம் முழுமையாகக் கொடுத்துவிடுங்கள்; அதை எப்படிப் பாதுகாப்பது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்." — ஜான் வெஸ்லி (John Wesley)

இருதயம் என்பது வெறும் ரத்தத்தை இறைக்கும் உறுப்பு மட்டுமல்ல; அது நம் எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் தீர்மானங்களின் மையப்புள்ளி. ஒரு ஊற்றிலிருந்து தூய்மையான தண்ணீர் புறப்பட்டால் தான் அது சுற்றியுள்ள நிலத்தைச் செழிப்பாக்கும். அதுபோல, நம் இருதயத்தில் கிறிஸ்து காண்பித்த அன்புடன் கூடிய நேர்மறை எண்ணங்கள் இருக்கும்போது, நம் வார்த்தைகளும் செயல்களும் பிறருக்கு வாழ்வளிக்கும் ஜீவ ஊற்றாக மாறும். மாறாக, கசப்பு, கோபம், பொறாமை, எரிச்சல், பழிவாங்கும் எண்ணம் போன்றவற்றை இருதயத்தில் சேமித்து வைத்தால், அது நம் சொந்த வாழ்வையும் நம்மைச் சுற்றியுள்ள குடும்ப மற்றும் சமூகச் சூழலையும் நஞ்சாக்கிவிடும். நம் வீட்டுக் கதவை தேவையில்லாத நபர்களுக்குப் பூட்டி வைப்பது போல, நம் சமாதானத்தைக் கெடுக்கும் தேவையற்ற காட்சிகளுக்கும் கருத்துகளுக்கும் இருதயத்தின் கதவை மூடப் பழக வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த உலகில், பணிச்சுமை மற்றும் குடும்பக் கவலைகளால் மனிதர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் (Stress) மனச்சோர்விற்கும் ஆளாகிறார்கள்.

புறச்சூழ்நிலைகளை நம்மால் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது; ஆனால், நம் இருதயத்தில் தேவ சமாதானத்தைக் காத்துக் கொள்ள முடியும்.

நீதிமொழிகள் 3:5 சொல்லுகிற படி சுய புத்தியின் மேல் சாயாமல் கர்த்தர் மீது நம்பிக்கை கொண்டு வாழுகின்ற போது நம் இருதயத்தை கர்த்தருடைய சமாதானம் நிரப்பும் அந்த சமாதானத்தின் வழியாக நாமும் நம்மை சூழ உள்ளவர்களும் வாழ்வின் வெளிச்சத்தை காண முடியும்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878