Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
7 ஆகஸ்ட் 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

நாவு: இருதயத்தின் கண்ணாடி

“உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.”

— யாக்கோபு 1:26

நாவை அடக்குவதே ஆவிக்குரிய வாழ்க்கையின் உயர்ந்த ஒழுக்கம். மௌனம், தேவ குரலைக் கேட்கச் செய்யும்." - ஜான் கிறிசோஸ்டோம்

தேவபக்தி என்பது ஆலயத்திற்குச் செல்வதிலும், ஆராதனையில் கலந்துகொள்வதிலும் மட்டும் வெளிப்படுவதில்லை; நாம் பேசும் வார்த்தைகளிலும் அது தெளிவாக வெளிப்படுகிறது. ஜெபிக்கும் உதடுகள், பிறரைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசினால், அந்தப் பக்தி முழுமையடையாது என்று யாக்கோபு எச்சரிக்கிறார்.நமது நாவு, நமது இருதயத்தின் கண்ணாடி. இருதயம் கிறிஸ்துவின் அன்பால் நிரம்பியிருந்தால், நாவிலிருந்து ஆறுதலும், கிருபையும், சமாதானமும், உண்மையும் வெளிப்படும். ஆனால் கோபம், பொய், புறங்கூறுதல், கடுஞ்சொல் ஆகியவை வெளிவந்தால், இன்னும் நமது உள்ளத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய இடங்கள் இருப்பதை அது நினைவூட்டுகிறது. ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது நாம் எவ்வளவு வேதத்தை வாசிக்கிறோம் அல்லது எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம் என்பதனால் மட்டுமல்ல, சோதனையின் நேரத்தில் நமது நாவிலிருந்து வெளிவரும் வார்த்தைகளாலேயே அதிகமாக அளவிடப்படுகிறது.

நம் நாவு கர்த்தரை துதிப்பதற்கும் கர்த்தரின் வார்த்தையை பிறருக்கு சொல்வதற்கும் பயன்படட்டும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878