Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
10 ஆகஸ்ட் 2026 திங்கள் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

கைகள்: சுத்தம் பண்ண படட்டும்

“நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.”

— யோபு 17:9

நாம் செய்கிற ஒவ்வொரு காரியமும் நம் கரங்களை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்கிறது. தேவனுக்கு முன்பாக உயர்த்தப்பட்ட கைகளே ஜெயத்தைப் பெறுகின்றன." — சி. எஸ். லூயிஸ்

ஒருவரின் நேர்மையையும் நற்குணத்தையும் குறிப்பிடும்போது, “அவர் கை சுத்தமானவர்” என்று சொல்வார்கள். ஆன்மீக வாழ்க்கையிலும் நம் இருதயத்தில் இருப்பது நம் செயல்களில் வெளிப்படும். நம் கைகள் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. அப்போஸ்தலராகிய யாக்கோபு குறிப்பிடும் போது “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; - யாக்கோபு 4:8. என்கிறார். தேவனோடு நெருக்கமாக வாழ விரும்பினால், நம் கைகளில் படிந்துள்ள பாவத்தின் கறைகள் அகற்றப்பட வேண்டும்.

வேதாகமத்தில் கைகளை குறித்து சொல்லப்பட்டுள்ள சில காரியங்கள்

🔵 அநியாயம் செய்யும் கைகள் – பிறரை ஏமாற்றாமல் இருப்போம். (நீதிமொழிகள் 11:1)

🔵 காயப்படுத்தும் கைகள் – வன்முறையால் பிறரைப் புண்படுத்தாமல் இருப்போம். (சங்கீதம் 11:5)

🔵 பேராசையின் கைகள் – இலஞ்சத்திற்கும் அநீதிக்கும் இடம் கொடுக்காமல் இருப்போம். (யாத்திராகமம் 23:8)

🔵 சோம்பேறிக் கைகள் – நன்மை செய்யத் தவறாமல் இருப்போம். (நீதிமொழிகள் 10:4)

🔵 உதவும் கைகளாக – தேவையுள்ளவர்களுக்கு உதவுவோம். (நீதிமொழிகள் 19:17)

அரசர் தாவீது குறிப்பிடும் போது “கர்த்தாவே, நான் குற்றமில்லாமையில் என் கைகளைக் கழுவி, உம்முடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன்.”- சங்கீதம் 26:6 என்கிறார்.

கைகளைத் தண்ணீரால் கழுவுவது உடலைச் சுத்தமாக்கும்; கைகளைப் பாவத்திலிருந்து சுத்தப்படுத்துவது வாழ்க்கையைச் சுத்தமாக்கும்.

இன்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: என் கைகள் தேவனுக்குப் பிரியமான காரியங்களையே செய்கின்றனவா? தேவன் கட்டளை இட்டதை என் கைகள் செய்து முடித்திருக்கிறதா? தேவனுக்கு நேராக உயர்த்தப்பட்ட எந்தக் கரங்களும் வாழ்க்கையில் தோற்றுப்போனதில்லை. நம் கரங்கள் சுயநலத்திற்காக சுருங்குவதையும், பாவத்திற்காகக் கறைப்படுவதையும் விட்டு விலகி, தேவனை நோக்கி ஆராதனையிலும், பிறருக்கு உதவி செய்வதிலும் உயரட்டும்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878