காதுகள்: தேவ சத்தத்தைக் கேட்கும் கருவி
“கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.”
— நீதிமொழிகள் 20:12
பிறரைக் பற்றிய வீண் வதந்திகளையும் ரகசியங்களையும் கேட்பது, விஷத்தை நம் சொந்தக் கிணற்றில் ஊற்றுவதற்குச் சமம். தூய்மையான செவிகளே தூய்மையான இருதயத்தை உருவாக்குகின்றன."
— ஜான் கிறிசோஸ்டோம்
நமது சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் அதற்குரிய நோக்குடன் படைத்த ஆண்டவர், நமக்குத் தந்த அரிய கொடைதான் காதுகள்.
இன்று தொழில்நுட்பம் வளர்ந்த உலகில், பிறர் பேசுவதையும் அவர்களின் ரகசியங்களையும் ரகசிய கருவிகள்' (Spy gadgets) மூலமாகக் கேட்க பலர் ஆசைப்படுகிறார்கள். பிறரின் ரகசியங்களை அறிய முற்படுவதை விட, படைத்தவரின் சத்தத்தைக் கேட்பதே மேலானது.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" (யோவான் 10:27) என்று இயேசு கூறினார்.
பிறர் என்ன பேசுகிறார்கள் என்று ஒளிந்திருந்து கேட்பதை விட, இறைவன் நம்மோடு என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க நேரத்தை ஒதுக்குவோம்.
பலியிடுவதைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும்... செவிகொடுத்தலும் உத்தமம்." (1 சாமுவேல் 15:22).
தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வதே நமக்கு பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் தரும்.
பிறருடைய தனிப்பட்ட விஷயங்களை ஆராய்வது, புறங்கூறுதல் மற்றும் வதந்திகளுக்குச் செவிகொடுப்பது போன்றவை மன அமைதியைக் கெடுக்கும்.
தேவனுக்குப் பிரியமில்லாத சத்தங்களுக்கு நம் காதுகளை மூடி, அன்பையும் ஞானத்தையும் மட்டுமே உட்கொள்வோம்.
அன்புக்குரியவரே நமது ஜெபங்கள் பின்வருமாறு அமையட்டும்..
"கர்த்தாவே, வீணானவைகளையும் பிறரின் ரகசியங்களையும் கேட்கும் ஆர்வத்தை அகற்றி, கற்றுக்கொள்பவனைப்போல உம்முடைய சத்தியத்தைக் கேட்கும்படி என் செவிகளைத் திறந்தருளும். (ஏசாயா 50:4)
ஜெபம்
நமது சத்தீஸ்கர் மாநில அருட்பணிகளுக்காக ஜெபிப்போம்,
அருட்பணியாளர்களின் பாதுகாப்புக்காகவும் சுதந்திரமாக கர்த்தரை ஆராதிக்க நிலவும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.