கண்கள்
“கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.”
— மத்தேயு 6:22
இன்று காலை நான் கண்ட ஒரு வாசகம்
'கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை; கொடுத்துச் செல்வோம் கண்களை.
அந்த வாசகம் மனதை ஆழமாகத் தொட்டது.
இது கண் தானத்தை பற்றிய விழிப்புணர்வாக இருந்தாலும், உண்மையில், இந்த உலகத்தை விட்டு நாம் எடுத்துச் செல்லப் போவது ஒன்றுமில்லை.
ஆனால், அன்பையும், இரக்கத்தையும், உதவியையும், நற்செயல்களையும் பிறருக்குக் கொடுத்துச் செல்லும் வாழ்க்கை மட்டுமே நிலைத்திருக்கும்.
தேவன் கொடுத்த கண்கள் பிறரின் குறைகளைத் தேடுவதற்கல்ல;
அவர்களின் கண்ணீரைக் காணவும்,
தேவைகளைக் கவனிக்கவும்,
கருணையுடன் உதவவும் கொடுக்கப்பட்டவை.
பொறாமையுடன் பார்க்கும் கண்கள் இருளை உண்டாக்கும்.
கருணையுடன் பார்க்கும் கண்கள் நம்பிக்கையை விதைக்கும்.
விசுவாசத்துடன் பார்க்கும் கண்கள் தேவனுடைய செயல்களைக் காணும்.
இன்று நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைக் காட்டிலும், யாரைக் காண்கிறோம், எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம்.
அன்புக்குரியவர்களே நமது ஜெபங்கள் பின்வருமாறு அமையட்டும்.
கர்த்தாவே, என் கண்களைத் திறந்து, உமது சித்தத்தையும், பிறரின் தேவையையும், உமது மகிமையையும் காணும் கிருபையைத் தாரும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.