Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
29 ஜூலை 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

முன்குறிக்கப்பட்டவர்கள் நாம்

“நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.”

— ஏசாயா 45:4

நம் வாழ்வில் நடைபெறும் எதுவும் தற்செயலாக நடப்பவை அல்ல; அவை ஆண்டவரால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டவை.

இதற்குச் சிறந்த வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறார் பாரசீக அரசர் மகா கோரேஸ் (Cyrus the Great). கி.மு. 550-ல் மேதியப் பேரரசைக் கைப்பற்றி, லீதியா மற்றும் பாபிலோனை வென்று ஒரு மாபெரும் பேரரசை அவர் நிறுவினார்.

கி.மு. 539-ல் பாபிலோனைக் கைப்பற்றியபின், யூதர்களைத் தாய்நாட்டிற்கு அனுப்பி எருசலேம் ஆலயத்தைக் கட்ட அரசாணை வெளியிட்டார் (எஸ்றா 1).

ஆனால், இந்த வரலாற்று வெற்றிகளை அந்த அரசர் பிறப்பதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பே, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் பெயர் சொல்லி அழைத்து முன்குறித்திருந்தார்.

ஒரு புறஜாதி சிற்றரசனை உலகப் பேரரசராக உயர்த்தித் தனது நோக்கத்தை நிறைவேற்றிய தேவன், நமது வாழ்க்கையையும் தற்செயலாக நடத்தவில்லை.

நமது பெயரையும் சூழ்நிலையையும் அறிந்தே அவர் நம்மை முன்குறித்திருக்கிறார். "நம் வாழ்க்கையை தேவன் மறந்துவிட்டாரோ?" என்று மனம் தளரவேண்டாம்.

தேவனுடைய திட்டம் ஒருபோதும் தோற்பதில்லை; அவர் குறித்த நேரத்தில் மூடப்பட்ட கதவுகள் திறக்கும்.

நமது கண்ணீர் மகிழ்ச்சியாகவும் காத்திருப்பு சாட்சியாகவும் மாறும்.

நம்மைப் பெயரறிந்து அழைத்த தேவன் இறுதிவரை உண்மையுள்ளவராக இருப்பார்.
நம்மை கர்த்தர் ஒரு நோக்கத்திற்காக படைத்திருக்கிறார் அவர் சித்தம் இன்றி எதுவும் நமது வாழ்வில் நடைபெறாது என்பதை உணர்ந்து முழுமையாய் அவரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து வாழ்வோம் நம் வாழ்வு ஆசிர்வதிக்கப்படும்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878