முப்புரிநூல்: தேவனால் பிணைக்கப்பட்ட குடும்பத்தின் பலம்
“ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.”
— பிரசங்கி 4:12
குடும்பத்தின் உண்மையான பலம் எண்ணிக்கையில் இல்லை; தேவனை மையமாகக் கொண்ட ஒற்றுமையில்தான் உள்ளது."
— John Chrysostom
இன்றைய உலகில் குடும்பங்களை உடைப்பதற்கான தாக்குதல்கள் வெளியில் இருந்து மட்டுமல்ல; வீட்டுக்குள்ளேயே மௌனம், புரிதலின்மை, தனிமை, கைப்பேசி அடிமைத்தனம், பொருளாதார அழுத்தம், தலைமுறை இடைவெளி, சுயநலம் போன்றவற்றின் வழியாகவும் வருகின்றன.
இவற்றை தனித்தனியாக எதிர்கொள்ளும் குடும்பங்கள் எளிதில் சோர்ந்து போகலாம்.
ஆனால், கணவன்–மனைவி ஒருவருக்கொருவர் துணையாக நின்று,
பிள்ளைகள் பெற்றோருடன் அன்பிலும் மரியாதையிலும் இணைந்து,
அந்த உறவின் மையத்தில் தேவன் இருப்பாரானால், அந்தக் குடும்பம் "முப்புரிநூல்" போல வலிமை பெறும்.
அந்தக் குடும்பத்தை உடைக்க நினைக்கும் எந்தப் புயலும் எளிதில் வெற்றி பெறாது.
ஒரே வீட்டில் வாழ்வது குடும்பமல்ல; ஒரே இதயத்துடன், ஒரே ஜெபத்தில், ஒரே நம்பிக்கையில் இணைந்து வாழ்வதே உண்மையான குடும்பம்.
தேவனை மையமாகக் கொண்ட ஒற்றுமை, இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய சவால்களையும் வெல்லும் வல்லமை உடையது.
தேவன் இணைத்த குடும்பம் உறுதியான கோட்டை; அன்பு பின்னிய உறவு அறுபடாத முப்புரிநூல்.
நமது குடும்பங்கள் முப்பிரி நூலை போல உறுதியாய் நிலைத்திருக்க கர்த்தரை மையமாக வைத்து செயல்படுவோம்.