Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
9 ஜூலை 2026 வியாழன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

கர்த்தர் தரும் வெகுமதி

“கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைப் பெறுவீர்கள்”

— கொலோசெயர் 3:24

கடவுளுக்குச் சேவை செய்வதில் சோம்பலாய் இருப்பதை விட, அவருடைய ஊழியத்தில் தேய்ந்து அழிவது எவ்வளவோ மேலானது."
— ஜான் வெஸ்லி

அன்பானவர்களே,
உலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு பணிக்கும் மனிதர்கள் மதிப்பிட்டு ஊதியம் வழங்குகிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்காகச் செய்யப்படும் சேவையின் மதிப்பை உலகம் அறியாது.

மனிதர்களால் கவனிக்கப்படாத சிறிய நற்கிரியையையும், கண்ணீரோடு செய்யப்பட்ட ஊழியத்தையும் கர்த்தர் ஒருபோதும் மறப்பதில்லை.

"தேவன் மனிதர்களை அவர்களின் செயல்களின் அளவைக் கொண்டு மதிப்பிடுவதில்லை, மாறாக அவர்கள் அதைச் செய்யத் தூண்டிய அன்பின் அளவைக் கொண்டே மதிப்பிடுகிறார்."
— அன்னை தெரசா
அதனால்தான் வேதாகமம் கூறுகிறது:

"நீங்கள் கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் வீணாயிருக்கமாட்டாதென்று அறிந்து, திடமனதாயிருந்து, அசைக்கப்படாமல், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயிருங்கள்" (1 கொரிந்தியர் 15:58) என்கிற உன்னத வாக்குத்தத்தமும் நம் உழைப்பிற்கு அரணாக நிற்கிறது.

நாம் எதிர்பார்க்க வேண்டியது மனிதர்களின் பாராட்டோ, அங்கீகாரமோ அல்ல; கர்த்தரின் "நன்றாயிற்று" என்ற பாராட்டே. அவர் தரும் பலன் சம்பளம் அல்ல அழியாத, மாசுபடாத பரலோகச் சுதந்தரம்.

எனவே, இன்று சோர்ந்து போகாதீர்கள். யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து மனம் தளராதீர்கள்.
கர்த்தருக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு விசுவாசச் செயலும், ஒவ்வொரு தியாகமும், ஒவ்வொரு ஜெபமும் பரலோகத்தில் கணக்கிடப்படுகிறது.
"கிறிஸ்துவுக்காக நாம் செய்யும் எந்தவொரு காரியமும் வீணாவதில்லை; உலகம் நம்மை மறக்கலாம், ஆனால் நம் பரலோக எஜமான் நம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.

ஏனெனில், "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது" (வெளிப்படுத்துதல் 22:12) என்று கர்த்தர் தாமே நமக்கு உறுதியளிக்கிறார்.

மனிதர்கள் மறந்தாலும், தேவன் மறப்பதில்லை. மனிதர்களின் வெகுமதி தற்காலிகம்; பரலோக எஜமானின் வெகுமதி நித்தியமானது. ஆகவே, மனிதர்களுக்காக அல்ல, கர்த்தருக்காக உண்மையோடு வாழ்வோம்.

கர்த்தர் தரும் நித்திய வெகுமதிக்காக காத்திருப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

1. ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆலய பணிகளுக்காக

2. சத்தீஸ்கர் மாநிலத்தில் மதவாதிகளால் இடிக்கப்பட்ட ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகிறது தடைகள் ஏற்படாத வண்ணம் வேலைகள் நடைபெற

3. மிட்டப்பள்ளி ஆலய கட்டுமான பணிகளுக்காக

4. மேல்பாச்சேரி கிராமத்தில் கட்டப்படவுள்ள ஆலயத்திற்காக

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878