Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
8 ஜூலை 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

எஜமானனின் பணியினை செய்ய சுயம் அழிய வேண்டும்

நம் பரம எஜமானனின் பணியைச் செய்யும்போது, 'நான்' என்னும் சுயம் முற்றிலும் அழிந்து, தாழ்மையே பிரதானப்பட வேண்டும் என்பதை லூக்கா 17:10 நமக்குத் தெளிவாக்குகிறது.

நாம் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தாலும், "நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், கடமையை மாத்திரம் செய்தோம்" என்று நம்மை ஒடுக்குவதே உண்மையான விசுவாசம்.

"தேவன் கிரியை செய்ய வேண்டுமானால், முதலில் மனிதனுடைய சுயம் சாம்பலாக வேண்டும்."
— St. அகுஸ்தினார்

நாம் தேவனுடைய ராஜ்யத்தில் செய்யும் எந்த ஊழியமும் நம்முடைய தகுதியால் வருவதல்ல; அது அவர் நமக்குத் தந்த மாபெரும் கிருபை. எங்கு சுய பெருமை தலைதூக்குகிறதோ, அங்கு தேவ மகிமை மறைந்துவிடுகிறது. நாம் வெறும் கருவிகளே; கிரியை செய்பவர் அவரே.

"நீங்கள் உங்களை எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்த்தி, 'நான் ஒன்றுமில்லை' என்று உணருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கிறிஸ்து உங்களில் பெருகுகிறார்."
— மதர் தெரசா (Mother Teresa)

எனவே, கைம்மாறோ பாராட்டுக்களோ எதிர்பாராமல், எல்லாப் புகழையும் எஜமானனுக்கே தந்து, நம் சுயம் அழிந்து, "ஆண்டவரே, நான் வெறும் கருவிதான்" என்று சிலுவையின் நிழலில் நம்மை மறைத்துக் கொள்வதே உண்மையான சீஷத்துவம்.

ஜெபம்

வயநாடு பகுதியில் நிலச்சரிவால் மரணம் அடைந்தவர்களின் குடும்ப ஆறுதலுக்காக பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் சுகம் பெற, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட, அவர்களுக்கு ஏற்ற நிவாரணங்கள் கிடைக்கப் பெற ஜெபிப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878