Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
10 ஜூலை 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

மண்ணின் எல்லைகளைத் தாண்டி… மகிமையின் சிங்காசனம் நோக்கி

“நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”

— கொலோசெயர் 3:1,2

நாம் பரலோகத்தை இலக்காகக் கொண்டால், பூமியும் நமக்குக் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் பூமியை மட்டுமே இலக்காகக் கொண்டால், இரண்டையுமே இழந்துவிடுவோம்."
— சி. எஸ். லூயிஸ்

மரணத்தின் தளைகளை உடைத்து, பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் சகல அதிகாரத்தோடும் மகிமையோடும் வீற்றிருக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் "நித்திய ராஜ்யமே" நம் வாழ்வின் உன்னத இலக்கு.

நாம் கிறிஸ்துவோடு புதிய ஜீவனுக்குள் பிரவேசித்தவர்கள்; எனவே, நம் சிந்தனைகளும் தற்காலிகமான மண்ணின் கவலைகளிலோ, புகழிலோ, அழியக்கூடிய உலக இச்சைகளிலோ சிறைப்பட்டிருக்கக் கூடாது.

பூமியின் எல்லைகளுக்குள் நம் கண்கள் சுருங்கிவிடும்போது, வாழ்வின் போராட்டங்கள் நம்மை சோர்வடையச் செய்கின்றன.

ஆனால், நம்முடைய உண்மையான குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து (பிலிப்பியர் 3:20), முதலாவதாக தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் நாம் தேடும்போது (மத்தேயு 6:33), தற்காலிகமான உலகத் தேவைகள் யாவற்றையும் தேவன் தாமே நம் வாழ்வில் கூடக் கூட்டுவார்.

நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய், பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்ப்போம் (எபிரெயர் 12:2). கீழ்நோக்கிப் பார்த்து கலங்குவதை நிறுத்திவிட்டு, மேல்நோக்கிப் பார்த்து விசுவாசத்தோடு நித்தியத்தை நோக்கி நடைபோடுவோம்.

மாறிப்போகும் உலகை அல்ல, மாறாத மகிமையின் தேவனை நாடுவோம்.

ஜெபம்

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளா மாநிலங்களுக்காகவும்,

மீண்டும் அமெரிக்கா ஈரான் தேசங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற யுத்தத்தில் இருந்து மக்கள் அமைதியை காணவும் ஜெபிப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878