கிறிஸ்துவை வெளிப்படுத்தும் ஆவியானவர்
“அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.”
— யோவான் 16:14
“என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்” என்று ஆண்டவர் கூறும்போது,
கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பு, கிருபை, சமாதானம், மன்னிப்பு, வல்லமை மற்றும் பரலோக நம்பிக்கை அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் உயிர்ப்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறார்.
கிறிஸ்து தன்னுடைய பிரிவுக்குப் பின் , தம்முடைய சீஷர்கள் தனிமையிலும் குழப்பத்திலும் தளர்ந்து போகாமல் இருக்க, பரிசுத்த ஆவியானவரின் மகத்தான செயல்பாட்டை இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார். இது வெறும் ஒரு வாக்குறுதி அல்ல; விசுவாசியின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் தெய்வீக அனுபவத்தின் வெளிப்பாடாகும்.
பரிசுத்த ஆவியானவருக்கு முழுமையாக இடம் கொடுக்கும் வாழ்க்கை, கிறிஸ்துவை உயர்த்தும் வாழ்க்கையாக மாறும்.
ஆவியானவர் நம்முள் செயல்படும்போது, நமது சுயம் குறைந்து, கிறிஸ்து பெருகுகிறார்.
அதுவே ஒரு உண்மையான விசுவாசியின் அடையாளம்.
நமது செயல்பாட்டிலும் சுயம் மறைந்து கிறிஸ்து வெளிப்பட வேண்டும் கிறிஸ்துவை இவ்வுலகில் காண்பிக்கும் மாதிரிகளாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த அழைப்பில் நிலைத்திருக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணைச் செய்வார்.
ஜெபம்
அருட்பணித்தளங்களில் அருட்பணி செய்ய அருட்பணியாளர்கள் தேவை.
அருட்பணியாளர்கள் கிடைக்க ஜெபிப்போம்.