Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
20 மே 2026 புதன் உயிர்த்தெழுதல் காலம்

சத்திய ஆவியின் வழிகாட்டுதல்

“சத்தியஆவியாகிய அவர் வரும்போது, ... அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.”

— யோவான் 16:13

பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பின்னால் இருந்து தள்ளுவதில்லை, அவர் நமக்கு முன்னால் சென்று, நாம் நடக்க வேண்டிய பாதையைக் காண்பித்து நம்மை வழிநடத்துகிறார்."
— சி. எச். ஸ்பர்ஜன் (C.H. Spurgeon)

நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அறியாமை பல நேரங்களில் நமக்குள்ளே அச்சத்தையும், தயக்கத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு உன்னதமான வாக்குத்தத்தத்தை அருளியுள்ளார். அதுதான் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) அந்தத் தேற்றவாளர் நாம் நடக்க வேண்டிய பாதையை நமக்கு முன் சென்று காண்பிக்கின்றார்.
இந்த வசனம் நமக்கு மூன்று முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது:
1. கர்த்தரின் வழிநடத்துதல்:

அவர் நம்மைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். நம்முடைய குழப்பங்களின் மத்தியில் சரியான பாதையைக் காட்டும் தெய்வீக ஒளியாக அவர் இருக்கிறார்.

2. பரலோகத்தின் குரல்: அவர் சுயமாய்ப் பேசாமல், பிதாவினிடத்தில் கேட்பவைகளையே நமக்குச் சொல்லுகிறார். எனவே, அவருடைய வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை அது ஒருபோதும் பொய் வாக்குறுதிகளாக இருப்பதில்லை அவருடைய வாக்கு மாறாதது.
3. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை:

வரப்போகிற காரியங்களை அவர் நமக்கு அறிவிப்பார். இதன் மூலம் நமது எதிர்காலத்தைக் குறித்த பயம் நீங்கி, நாம் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ நமக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

சகல சத்தியத்திலும் நம்மை நடத்தும் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றபோது சத்தியத்தில் நிலைத்திருந்து பரலோக ராஜ்ஜியத்தை உலகில் பிரசித்தப்படுத்த ஆண்டவருடைய சாட்சிகளாக மாறுவோம்.

ஜெபம்

நமது அருட்பணி இயக்கத்தின் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் மிஷனரி பணிகளுக்காக ஜெபிப்போம். ஆலயங்கள் இல்லாத இடங்களில் நிலம் வாங்கி ஆலயம் கட்ட ஆண்டவர் பங்காளர்களை எழுப்பவும் ஜெபிப்போம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878