UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
21 மார்ச் 2026
சனி
தவக்காலம்
பத்தாம் கற்பனை
“பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.”
— யாத்திராகமம் 20:17
அயலான் மனை மாண்போ,
அவன்வீட்டுப் பொருளோ எதுவானாலும் -
விழி வழி நுழையும் 'இச்சை' எனும் நஞ்சு
அழிக்கும் நம் ஆத்துமத் தூய்மையை
"பொருளாசை எல்லாத் தீமைக்கும் வேர்" - எனப் (1 தீமோ 6:10)
பவுலின் எச்சரிக்கை நம் செவியில் ஒலிக்கட்டும்,
அயலான் தோட்டத்து அத்திப் பழத்தை விட - நம்
அகத்தில் விளையும் 'திருப்தி' இனிது! (எபி 13:5)
"உலகம் முழுதும் நம்முடையதாக மாறினாலும்" - நம் (மத் 16:26)
உயிர் தொலைந்தால் லாபம் ஏது?
பிறன்பொருள் யாதும் இச்சியாத இதயமே இறை
பீடம் அமரும் பேரொளிச் சுடர்கள்,