UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
5 மார்ச் 2026
வியாழன்
தவக்காலம்
படைப்பின் பாதுகாவலர் நாம்
வானும் நிலமும் இறைவனின் படைப்பு,
வாழ்வை வழங்கும் இயற்கையின் தொகுப்பு.
"பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது"
புனிதமாய் அதைக் காப்பது நம் பொறுப்பு.
தாகம் தீர்க்கும் நதிகள் காப்போம்,
தழைக்கும் காடுகளை உயிரெனப் பார்ப்போம்.
கர்த்தரின் கொடையைச் சிதைக்காமல் சேர்த்து,
தரணியை நம் தலைமுறைக்காய் பாதுகாப்போம்.
"பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. (சங்கீதம் 24:1)