UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
19 பிப்ரவரி 2026
வியாழன்
தவக்காலம்
வசந்தத்தின் இரண்டாம் நாள் இது
உதிரட்டும் அகந்தையின் உலர்ந்த சருகுகள்,
உயிர்க்கட்டும் மன்னிப்பின் ஈரம்.
“நான்” எனும் சுயம் நிழலாய் மறைந்திட,
“அன்பு” எனும் நல் ஆயுதம் முளைக்கும்.
பழைய “நான் ” பனித்துளியாய் கரையட்டும்,
புதிய “நான் ” இறைவனில் மலரட்டும்.
அகந்தை கருகிட, அருள் பொழியட்டும்;
மடிதல் என்பது முடிவின் மொழியல்ல
இறைவனில் அது புதுப்பிறப்பின் விடியல்.
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17