Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
18 செப்டம்பர் 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

ஜெபம்: வாழ்வின் கடைசி முயற்சி அல்ல, முதல் அழைப்பு

“என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”

— எரேமியா 33:3

நம்முடைய வாழ்க்கையில் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. பிரச்சனை வந்ததும் முதலில் மனிதர்களைத் தேடுகிறோம். அடுத்து நம்முடைய அறிவை நம்புகிறோம்.

பின்னர் பல வழிகளை முயற்சி செய்கிறோம். எல்லா கதவுகளும் மூடப்பட்ட பிறகுதான், இனி ஆண்டவர் மட்டுமே நம்பிக்கை என ஜெபிக்க தொடங்குகிறோம். எரேமியா சிறையில் இருந்தபோது கர்த்தர் அவரிடம்,

எல்லா வழிகளையும் முயற்சி செய்துவிட்டு என்னிடம் வா” என்று சொல்லவில்லை. என்னை நோக்கிக் கூப்பிடு என்றார். ஜெபம் என்பது அவசரகாலத்தில் மட்டும் திறக்கும் கதவு அல்ல. அது தினசரி உறவின் கதவு. பிரச்சனை இல்லாத நாளிலும் ஜெபிப்பவர்கள், பிரச்சனை வந்த பிறகு கர்த்தரை தேடி அலைய வேண்டியதில்லை. அவர்களுக்கு ஏற்கனவே தேவனோடு உறவு இருக்கிறது. சில நேரங்களில் வாழ்க்கையில் சில விரும்பத்தகாத செய்திகளை

கேட்டவுடன் பதற்றம். பிரச்சனை வந்தவுடன் கவலை.

தோல்வி வந்தவுடன் மனச்சோர்வு. என வாடி விடுகிறோம் அல்லது அவசர முடிவுகளை எடுக்கிறோம்.

முடிவெடுப்பதற்கு முன் ஜெபிப்போம்.

பதில் சொல்வதற்கு முன் ஜெபிப்போம்.

பயப்படுவதற்கு முன் ஜெபிப்போம்.

வழி தேடுவதற்கு முன் ஜெபிப்போம்.

எரேமியா 33:3-ல் தேவன்,

“நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பேன்” என்கிறார்.

அதாவது, ஜெபத்தின் மூலம் தேவன் சூழ்நிலையை மட்டும் மாற்றுவதில்லை; சூழ்நிலையைப் பார்க்கும் நம்முடைய பார்வையையும் மாற்றுகிறார். நாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடத்தில், தேவன் இன்னும் தொடங்கவில்லை என்று சொல்லக்கூடும். நாம் வழியில்லை என்று பார்க்கும் இடத்தில், தேவன் நான் ஒரு வழியை உருவாக்குகிறேன் என்று சொல்லக்கூடும்.

அன்புக்குரியவர்களே நம் வாழ்வில் ஜெபத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்தாமல் முதல் ஆயுதமாக வைத்திருப்போம். ஜெபத்தை அவசரகால உபயோகத்திற்கு மட்டுமல்ல தினசரி வாழ்க்கை முறையாக மாற்றுவோம். மனித வழிகளைத் தேடிய பிறகு தேவனைத் தேடுவது ஜெபம் அல்ல; தேவனைத் தேடி, அவருடைய வழியில் நடப்பதே ஜெப வாழ்க்கை.

ஜெபம் கடைசி முயற்சி அல்ல.

ஜெபமே முதல் அழைப்பு.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878