Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
22 செப்டம்பர் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

மனமகிழ்ச்சி

“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”

— சங்கீதம் 37:4

மனமகிழ்ச்சி என்பது சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால் வரும் தற்காலிக சந்தோஷம் அல்ல; கர்த்தரோடு கொண்டிருக்கும் உறவிலிருந்து பிறக்கும் உள்ளத்தின் நிறைவு.

உலகத்தின் மகிழ்ச்சி சூழ்நிலைகளோடு மாறலாம்; ஆனால் தேவனில் கிடைக்கும் மகிழ்ச்சி சூழ்நிலைகளைத் தாண்டி நிலைத்திருக்கும்.

கவலைகள் நம்மைச் சூழ்ந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை நம் இருதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நன்றியுள்ள இருதயம் சிறிய ஆசீர்வாதங்களிலும் பெரிய மகிழ்ச்சியைக் காணும்.

ஜெபம் நமது பாரங்களை தேவனிடம் ஒப்படைக்கச் செய்கிறது. தேவனுடைய வார்த்தை நம்மைச் சோர்விலிருந்து நம்பிக்கைக்கும், பயத்திலிருந்து விசுவாசத்திற்கும் நடத்துகிறது.

“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; மறுபடியும் சொல்லுகிறேன், சந்தோஷமாயிருங்கள்.” பிலிப்பியர் 4:4

நாம் கர்த்தருக்குள் மகிழும்போது, நமது விருப்பங்களும் அவருடைய சித்தத்திற்கு ஏற்றவையாக மாறுகின்றன.

சூழ்நிலைகள் மாறாவிட்டாலும், நம்மோடு இருக்கும் தேவன் மாறுவதில்லை. ஆகவே, நமது மகிழ்ச்சி சூழ்நிலைகளை சார்ந்து இராமல் நம்மை நடத்தும் கர்த்தர் இடமே இருக்கிறது என நம்மை ஒப்படைப்போம்.

என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், தேவன் நம்மை நடத்துகிறார் என்று நம்புவோம்.

வழி தெரியாவிட்டாலும், அவர் வழிநடத்துவார் என்று விசுவாசிப்போம்.

பதில் தாமதமானாலும், அவர் நம்மை மறந்துவிடவில்லை என்று உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.

கர்த்தரில் மகிழ்வோம்; அவரை முழுமையாக பற்றிக்கொண்டு நம்பிக்கையோடு முன்னேறுவோம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878