வாழ்க்கையில் காணப்படும் உண்மை
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்”
— நீதிமொழிகள் 28:20

உண்மை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அல்ல; சூழ்நிலை எப்படியிருந்தாலும் மாறாமல் இருப்பது.
உண்மை என்பதற்கான வேதாகம மூலமொழிச் சொற்கள்:
எபிரேயம்: אֱמֶת — ’Emet (எமெத்) நம்பகத்தன்மை / நிலைத்தன்மை
கிரேக்கம்: ἀλήθεια — Alētheia (அலேத்தியா) யதார்த்தம் / பொய்யற்ற நிலை
நமது தேவனின் குணங்களில் ஒன்று உண்மை அதை அவரைபோலவே அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்திலும் எதிர்பார்க்கிறார். பரிசுத்தம், விசுவாசம் மட்டுமல்ல உண்மையும் நம் வாழ்வின் முக்கிய குணமே
பரிபூரண ஆசீர்வாதத்தின் அளவுகோல் உண்மையே.
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர் சங்51 : 6
வெறும் வாயின் வார்த்தையிலும் வெளி தோற்றத்திலும் அல்ல அன்றாட வாழ்விலும் அந்தரங்க ஜீவியத்திலும் உண்மை குணத்தை நாம் வெளிகாட்ட தேவன் விரும்புகிறார்.
உரியாவின் உண்மை : வேதத்தில் அநேகர் உண்மைக்கு உதாரணமாக காணப்பட்டாலும் உரியா இதில் ஒரு படி மேல் (2-சாமு 11 : 6-13) உரியா = யாவே என் வெளிச்சம்.
இராஜாவாகிய தாவீதுக்கு தான் சாகும் வரை அல்ல சாவிலும் உண்மையை காட்டினார் உரியா. தன் மரணத்தின் நிருபத்தை சுமந்து செல்லும் நேரத்திலும் தன் உண்மை குணத்தை நிருபித்தார் உரியா.
உலக எஜமானுக்கு இப்படிப்பட்ட உண்மை குணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால்
பரலோக எஜமானுக்கு எத்தகைய உண்மையை நாம் காண்பிக்க வேண்டும்? உரியா – வாய்ப்பு இருந்தும் தவறானதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதுவே அவனுடைய உண்மை. உண்மையாய் இருப்பவர் எவரும் ஊழியம் செய்வர்,ஆனால் ஊழியம் செய்யும் எல்லாராலும் உண்மையாய் இருப்பதில்லை.
...தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என்கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும். சங் (101:6)
கர்த்தர் தேடுவது திறமை, பதவி, பணம் புகழ் படைத்தவர்களை அல்ல தன்னைப்போல உண்மையுள்ளவர்களை / கொஞ்சத்திலும் உண்மையாய் இருப்பவர்களை நமது குடும்பத்தில், வேலையில், படிப்பில், திருச்சபையில், பொறுப்புகளில் நம்முடைய இந்த உண்மை குணம் எல்லாவற்றிலும் வெளிப்படும் பட்சத்தில் நம்மை பரிபூரண ஆசீர்வாதத்தினால் நிரப்ப அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
...உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். (சங் 31:23).
எதுவரைக்கும் உண்மை?
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். வெளி (2:10)
ஆம் மரணபரியந்தம் உண்மை குணத்தை ஆண்டவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார்.
அவ்வாறு நமது உண்மை குணத்தை வெளிப்படுத்தும் போது இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் மகிமையான கிரீடத்தை பெறுவோம் என வேதம் திட்டவும் தெளிவுமாக விளக்குகிறது.
“வாயில் இருக்கும் உண்மை வார்த்தையைவிட, வாழ்க்கையில் காணப்படும் உண்மை மிகப் பெரிய சாட்சி.”