கால்கள்: ஆயத்தம் என்னும் பாதரட்சையை அணிவோம்
“சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்...”
— எபேசியர் 6:15

சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் கால்கள் சாத்தானின் தலையை நசுக்கும் வல்லமை கொண்டவை." — ஜான் வெஸ்லி (John Wesley)
ஒரு போர்வீரனுக்கு பாதரட்சை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆன்மீக வாழ்க்கையில் நம்முடைய கால்கள் அணியும் "ஆயத்தம்" என்னும் பாதரட்சையும் மிகவும் முக்கியமானது. முட்களும் கூர்மையான கற்களும் நிறைந்த பாதையில் போர்வீரன் காயமடையாமல் தடையின்றி முன்னேறச் செய்வது அவனது காலணிகளே. நம் கால்கள் செல்லும் இடமெல்லாம் பிரிவினையோ, கசப்போ அல்ல கிறிஸ்துவின் சமாதானமும் அன்பும் மட்டுமே பரவ வேண்டும். நற்செய்தியை அறிவிக்கவும், நன்மை செய்யவும் நம் கால்கள் எப்போதும் தயார் நிலையில் (Ready to move) இருக்க வேண்டும்.
இன்றைய நாளில், சோதனைகளிலும் புயல்களிலும் அசையாமல் நிற்க... தேவ சமாதானத்தை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஆயத்தத்தின் பாதரட்சையை நமது கால்களில் அணிந்துகொள்வோம்.
நம் கால்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் தேவ மகிமைக்காகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கட்டும்.
ஜெபம்
ஆண்டவரை அறியா இடங்களில் அருட்பணியாளர்களாக பணிபுரியும் அருட்பணியாளர்கள் ஆண்டவருக்காய் ஏராளமான ஜனங்களை ஆயத்தம் செய்யும் அருட்பணியாய் வல்லமையாய் நிறைவேற்ற ஜெபிப்போம்