அடங்கியிருத்தல்
“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”
— 1 பேதுரு 5:6
தேவன் இல்லாதவைகளில் இருந்து அனைத்தையும் படைக்கிறார்; எனவே, ஒரு மனிதன் தான் 'ஒன்றுமில்லை' என்று தேவனுக்கு முன் உணரும் வரை, தேவன் அவனில் எதையும் செய்ய முடியாது.-மார்ட்டின் லூதர்
இன்றைய தலைமுறை "சுதந்திரம்" என்ற பெயரில் யாருக்கும் அடங்கிப்போகக் கூடாது என்ற தவறான பாதையில் பயணிக்கிறது. இந்த அடங்க மறுக்கும் மனப்பான்மைதான் இன்று நம் வீடுகளையும் சமூகத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது
தற்போது அனேக பெற்றோர் பகிர்ந்து கொள்ளும் காரியம் தங்கள் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்குவதில்லை அன்பையும் கண்டிப்பையும் மீறி, சுய விருப்பமே பெரிது என பிள்ளைகள் பெற்றோர் சொல்லைத் தட்டுகிறார்கள் என்பதே.
திருச்சபைகளை பொருத்தவரை அனேகர் கடவுளுக்கு அடங்குவதில்லை படைத்த தேவனுடைய வார்த்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, சுய புத்தியையும் பணத்தையுமே நம்பி வாழ்கின்றனர்.
அன்புக்குரியவர்களே,
அடங்கிப் போவது அடிமைத்தனமோ, பலவீனமோ அல்ல, அதுதான் மெய்யான ஒழுக்கமும் பாதுகாப்பும். பெற்றோருக்கு அடங்காத பிள்ளை வழிகெட்டுப் போவது போல, கடவுளுக்கு அடங்க மறுக்கும் மனிதன் வாழ்க்கையின் மெய்யான ஆசீர்வாதத்தை இழந்து போகிறான்.
நம்முடைய சுயநலத்தையும், "நான், என் இஷ்டம்" என்ற அகந்தையையும் சிலுவையில் அறைவோம்.
பெற்றோருக்குக் கீழ்ப்படிவோம்; சமூகத்தில் சாட்சியாய் வாழ்வோம்; தேவனுடைய பலத்த கைக்குள் நம்மைத் தாழ்த்துவோம்.
நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்போது, ஏற்ற காலத்தில் அவரே நம்மை உயர்த்தப்போவது உறுதி.