Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
18 ஜூலை 2026 சனி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

நல்ல நிலம் – பலன் தரும் இதயம்

“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்.”

— மத்தேயு 13:23

"God's Word in the heart is better than God's Word in the hand."
"கையில் இருக்கும் கடவுளின் வார்த்தையை விட, இதயத்தில் இருக்கும் கடவுளின் வார்த்தையே மேலானது."
— Thomas Brooks

நல்ல நிலம் என்பது வெறும் வளமான மண் அல்ல. அது உழப்பட்டு, கற்கள் அகற்றப்பட்டு, முட்கள் பிடுங்கப்பட்டு, விதை வேரூன்ற ஏற்றவாறு ஆயத்தப்படுத்தப்பட்ட நிலம்.

அந்த நிலம் விதையை எதிர்க்காது; அதை வேரூன்ற அனுமதிக்கிறது. காலம் வரும்போது பெருகிய பலனை அளிக்கிறது.

அப்படிப்பட்ட நல்ல நிலம்தான் தேவன் விரும்பும் இதயம்.

பெருமை என்ற கற்கள் அகற்றப்பட்டு,
உலகக் கவலை என்ற முட்கள் பிடுங்கப்பட்டு, மனந்திரும்புதலால் உழப்பட்டு, கீழ்ப்படிதலால் மென்மையடைந்த இதயம்தான் நல்ல நிலம்.

அத்தகைய இதயத்தில் விழும் தேவனுடைய வார்த்தை வெறும் ஒலியாகக் கடந்து போவதில்லை; அது வேரூன்றி, வாழ்க்கையை மாற்றி, குணத்தைப் பரிசுத்தப்படுத்தி, செயல்களில் வெளிப்பட்டு, இறுதியில் தேவனை மகிமைப்படுத்தும் கனிகளை விளைவிக்கிறது.

தேவன் நம்மிடம் கேட்பது, "எவ்வளவு வசனங்களைக் கேட்டாய்?" என்பதல்ல; "கேட்ட வசனம் உன் வாழ்க்கையில் எவ்வளவு பலன் கொடுத்தது?" என்பதே.

நல்ல நிலத்தில் விதை ஒருபோதும் வீணாகாது; நல்ல இதயத்தில் தேவனுடைய வார்த்தையும் ஒருபோதும் பலனின்றி திரும்பாது. அந்த இதயமே முப்பது, அறுபது, நூறு மடங்கு கனிகளைத் தரும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையாக மாறும்.

நம் இதயமாகிய நிலத்தை பயன்படுத்தி கர்த்தரின் வார்த்தையால் பலன் கொடுப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878