Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
15 ஜூலை 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

வழியருகே விழும் விதைகள்…

“ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.”

— மத்தேயு 13:19

தேவனுடைய வார்த்தை நம் காதுகளைத் தொட்டுச் செல்லும் மெல்லிய இசை அல்ல; அது நம் இதயத்தை உழுது, நம் கிரியைகளை மாற்றிப் போடும் தெய்வீகக் கலப்பை.

இயேசு கிறிஸ்து கூறிய "வழியருகே விழுந்த விதை"

என்பது வெறும் இருபது நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு விவசாயக் காட்சி மட்டுமல்ல

அது இன்றைய நவீன மனிதனின் மனசாட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு துல்லியமான கண்ணாடி.

இன்று வழியருகே என்பது கல்லும் மண்ணும் நிறைந்த வெற்றுப் பாதை அல்ல; மாறாக,

எதற்கும் நிலைத்து நிற்காத, ஆழமில்லாத மனித மனம்.
ஒரு காதில் வசனம் நுழைந்து, மறு காதில் ஆவியாய் மறைந்துவிடும் மேலோட்டமான வாழ்க்கை முறை.

ஆலய ஆராதனையில் தேவ வசனத்தை மிக உன்னிப்பாகக் கேட்பவர்கள் அடுத்த சில நிமிடங்களில் கைப்பேசியின் அறிவிப்புகள் (Notifications), சமூக ஊடகங்களின் சத்தங்கள், உலகக் கவலைகள், ஆசை, மற்றும் போட்டி மனப்பான்மை ஆகியவற்றால் அந்த வசனத்தை முற்றிலும் மறந்து விடுகிறோம்.

வசனம் விதைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அது மிதிக்கப்பட்டு விடுகிறது. இதுவே, இன்றைய "வழியருகே இருக்கும் இதயம்".

பொல்லாங்கன் எப்போதும் நம் கைகளில் இருக்கும் வேதாகமத்தைப் பறிப்பதில்லை; மாறாக, நம் இதயத்தில் விழும் வசனத்தின் தாக்கத்தைப் பறிக்கிறான்.

அவன் நம்மை வசனத்தைக் கேட்க அனுமதிக்கிறான்; ஆனால், அதைச் சிந்திக்கவோ, தியானிக்கவோ, வாழ்வில் செயல்படுத்தவோ விடாமல் நம் கவனத்தைத் திசைதிருப்புகிறான்.

இதன் விளைவாகவே, பலர் பல ஆண்டுகளாக வசனத்தைக் கேட்டும், அவர்களின் குணங்களிலோ, வாழ்க்கையிலோ எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

ஒவ்வொரு முறையும் வசனத்தைக் கேட்ட பின்பு,

இந்த வார்த்தை இன்று என் வாழ்வில் எதை மாற்ற வேண்டும்?"

என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும். அந்த நிமிடம் முதல், வழியருகே கிடந்த நம் இதயம், முப்பது, அறுபது, நூறாகப் பலன் தரும் நற்பலன் நிலமாய் மாறத் தொடங்கும்.

"கேட்கப்பட்ட வசனம் நினைவில் இருப்பது மட்டுமல்ல ஆசீர்வாதம்; வாழ்க்கையில் கிரியை செய்யும் வசனமே உண்மையான ஆசீர்வாதம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878