Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
24 ஜூன் 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

முழுமையான அன்பே முதன்மையான கட்டளை

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.”

— மாற்கு 12:30

விசுவாச வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்வி,
"நீ கடவுளுக்காக என்ன கொடுத்தாய்? என்ன செய்தாய் ? எவ்வளவு ஜெபிக்கிறாய்?" என்பதல்ல.

"நீ எவ்வளவு தேவனை நேசிக்கிறாய்?" என்பதே.
தேவன் நம்முடைய திறமைகளை விட நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார்.

நம்முடைய வார்த்தைகளை விட நம்முடைய அன்பை அளவிடுகிறார்.
நாம் அவருக்கு நேரம் கொடுக்கலாம்,
பணம் கொடுக்கலாம்,
ஊழியம் செய்யலாம்,
பல தியாகங்களையும் செய்யலாம்.
ஆனால் அன்பில்லாத அனைத்தும் வெறும் சடங்காகவே மாறிவிடும்.

அதனால்தான் இயேசு,
கற்பனைகளில் மிகப் பெரியது எது என்று கேட்டபோது,
ஜெபத்தைப் பற்றியோ, காணிக்கையைப் பற்றியோ, உபவாசத்தைப் பற்றியோ பேசவில்லை.

"தேவனை முழுமையாக அன்புகூரு" என்றார்.
ஏனெனில் அன்பு இருக்கும் இடத்தில் கீழ்ப்படிதல் இருக்கும்.
அன்பு இருக்கும் இடத்தில் பரிசுத்தம் இருக்கும்.
அன்பு இருக்கும் இடத்தில் அர்ப்பணிப்பு இருக்கும்.
அன்பு இருக்கும் இடத்தில் தேவன் மகிமைப்படுவார்.

தேவன் உங்கள் கைகளில் இருப்பதை அல்ல ,
உங்கள் இருதயத்தில் இருப்பதைத்தான் விரும்புகிறார்

முழுமையாக" தேவனை என்பது

• முழு இருதயம் (Whole Heart):

நம்முடைய உணர்ச்சிகள், ரகசிய எண்ணங்கள் அனைத்திலும் தேவனுக்கு மட்டுமே முதலிடம் தருவது; இருதயத்தை உலகத்தோடு பங்கிட்டுக் கொள்ளாமல் இருப்பது.

• முழு ஆத்துமா (Whole Soul):

"அவரன்றி எனக்கு வாழ்வில்லை" என்ற நிலைக்கு வந்து, நம்முடைய உயிர்வாழும் தாகமும் அடையாளமும் அவராகவே மாறுவது.

• முழு மனம் (Whole Mind):

நம்முடைய சிந்தனைகள், திட்டங்கள் மற்றும் முடிவெடுக்கும் திறன் அனைத்தையும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படுத்துவது.

• முழு பலம் (Whole Strength):

நம்முடைய உடல் உழைப்பு, ஆற்றல், நேரம், தாலந்துகள் அனைத்தையும் அவருடைய மகிமைக்காக மட்டுமே செலவிடுவது.

அன்புக்குரியவர்களே ...
அரைகுறை அர்ப்பணிப்புக்கு ஆன்மீகத்தில் இடமில்லை. அவர் நம்மை நேசித்து நமக்காக தம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்ததைப் போல நாமும் அவரை நேசிக்க அழைக்கிறார். ஆண்டவரை அன்பு செய்வோம் அவர் நம்மை அரவணைப்பார்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878