Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
23 ஜூன் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

திருச்சபையின் அழகிய அடையாளம் – நிலைத்திருத்தல்

“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.”

— அப்போஸ்தலர் 2:42

அன்பானவர்களே, ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச் சென்று, பாடல்களைப் பாடிவிட்டுத் திரும்புவதோடு நம்முடைய ஆராதனை முடிந்துவிடுகிறதா?
பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு உருவான ஆதி திருச்சபை நமக்கு உண்மையான ஆராதனையின் இலக்கணத்தைக் கற்பிக்கிறது. அவர்கள் வெறும் சடங்காகக் கூடவில்லை; மாறாக இரண்டு பிரதான காரியங்களை ஆத்திரத்தில் நமக்கு முன்பாக மாதிரியாக வைக்கிறது

• போதனையில் இறைவேண்டுதலில் நிலைத்திருத்தல்

மறையுரைகளையும் போதனைகளையும் அறியாமல் இருப்பது, கிறிஸ்துவையே அறியாமல் இருப்பதற்குச் சமம். அந்தப் போதனையில் நிலைத்திருக்க நமக்கு ஜெபமே வழிகாட்டி.- St. Jerome

விசுவாசிகள் அப்போஸ்தலரின் போதனையிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் இருந்தார்கள்.

• ஒரு மனதில் நிலைத்திருத்தல்

"உண்மையான ஆராதனை என்பது ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் பாடுவதோடு முடிவதில்லை; அது திங்கட்கிழமை காலையில் சகோதரர்களோடு இணைந்து வாழும் ஐக்கியத்தில் தொடர்கிறது."
A. W. டோசர்

ஆதித்திருச்சபை விசுவாச கூட்டத்தார் நாள்தோறும் ஆலயத்தில் ஒருமனப்பட்டு கூடிவந்து, அப்பம் பிட்டு, கள்ளமில்லா உள்ளத்தோடு இறைவனைப் புகழ்ந்தார்கள்.
ஆராதனை என்பது தனிநபர் சார்ந்தது மட்டுமல்ல; அது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, விசுவாசிகளின் உன்னத அனுபவம்.

"தனி ஒரு மனிதனால் கிறிஸ்துவைப் பிரதிபலிக்க முடியாது; ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் ஒரு விசுவாசக் கூட்டத்தினால் (சபையினால்) மட்டுமே கிறிஸ்துவின் முகத்தை உலகிற்குக் காட்ட முடியும்."
— டி. எல். மூடி (D.L. Moody)

ஆதி திருச்சபையைப் போல, நாமும் நம் சுயநலங்களை உடைத்து, கிறிஸ்துவின் உபதேசமாகிய அவருடைய நற்செய்தியிலும் ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருந்து, நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தோடும் ஐக்கியப்படுவோம். நம்முடைய நன்றியறிதலின் பலி, பிறரோடு பகிர்ந்து வாழும் அன்பின் பலியாக மாறட்டும்.

ஜெபம்

ஆண்டவரே, ஆதி திருச்சபையைப் போல அன்பிலும் ஐக்கியத்திலும் நிலைத்திருந்து, உமது மகிமையை வெளிப்படுத்தும் சபையாக எங்களை மாற்றும். ஆமென்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878