Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
10 ஜூன் 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

கிருபையினால் விசுவாசித்தவர்களும்... இன்றைய அப்பொல்லோக்களும்

வேதப்பகுதி: அப்போஸ்தலர் 18:27-28

"அவன் அங்கே போய் சேர்ந்தபோது, கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்."

கிருபையினால் விசுவாசிகளானவர்கள் யார்?

நம்முடைய சொந்த நீதியினாலோ அல்லது கிரியைகளினாலோ அல்ல, தகுதியற்ற நமக்குக் கிடைத்த தேவனுடைய அளவற்ற கிருபையினால் (எபேசியர் 2:8) இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்ட தேவ பிள்ளைகளே அவர்கள். இன்று நாம் கர்த்தரை அறிந்து கொண்டது நம்முடைய சுய பலத்திலோ, சுய நீதியிலோ அல்ல ஆண்டவருடைய கிருபையினால் மாத்திரமே

அன்று அப்பொல்லோ செய்த உதவி
ஆதித்திருச்சபையில் கிருபையினால் விசுவாசித்தவர்கள், சடங்காச்சாரங்கள் நிறைந்த யூத மார்க்கத்தின் நெருக்குதல்களுக்கு மத்தியில் விசுவாசத்தில் நிலைநிற்க முடியாமல் தத்தளித்தனர்.

அப்போது, வேதவாக்கியங்களில் வல்லவரான அப்பல்லோ இயேசுவே கிறிஸ்து என்று வேத ஆதாரங்களுடன் யூதர்களைத் தர்க்கித்து வென்று, தத்தளித்த விசுவாசிகளுக்கு மிகப்பெரிய துணையாகவும் பலமாகவும் நின்றார்.

இன்று நம் முன்னிருக்கும் சவால் (புரட்டு உபதேசங்கள்)

இன்று யூதர்களின் நெருக்குதல் இல்லை; மாறாக, தவறான கிருபையின் போதனைகளும் (Hyper-Grace), உலக இச்சைகளைத் தூண்டும் பொருளாசைப் போதனைகளும் (Prosperity Gospel) பெருகிவிட்டன. இத்தகைய புரட்டு உபதேசங்களின் மத்தியில், அநேக விசுவாசிகள் உண்மைச் சத்தியத்தை அறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய அப்பொல்லோக்களாக நாம் செய்ய வேண்டியது :
✝️உணர்ச்சிவசப்படும் போதனைகளுக்கு மத்தியில், விசுவாசிகளை உண்மையான வேத சத்தியங்களைக் கொண்டு தாங்க வேண்டும்.

✝️ தேவ கிருபை என்பது பாவம் செய்யக் கிடைத்த உரிமையல்ல; அது அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, பரிசுத்தமாய் வாழத் தரும் தெய்வீகப் பெலன் (தீத்து 2:11-12) என்பதை உணர்த்த வேண்டும்.

✝️விசுவாசத்தில் பலவீனமாய் இருப்பவர்களைக் குற்றப்படுத்தாமல், கள்ள உபதேசங்களின் வஞ்சகத்திலிருந்து அன்போடு மீட்டு, சத்தியத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

✝️கிருபையினால் விசுவாசிகளான ஆடுகளை வஞ்சிக்க அநேக புரட்டு உபதேசங்கள் இன்று சூழ்ந்துள்ளன. வார்த்தையிலும், கிருபையின் ஆழத்திலும் நாம் பலப்பட்டு, தடுமாறும் விசுவாசிகளுக்குத் துணையாய் நிற்பதே இன்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் 'அப்பொல்லோவின்' ஊழியம்.

நமது கால்கள் கிருபையின் மேல் நிற்கட்டும்; நமது கைகள் சத்தியத்தின் வாளை (தேவ வார்த்தையை) ஏந்தட்டும். அப்போதுதான் தடுமாறும் தேவ ஜனங்களுக்கு நம்மால் அரணாக நிற்க முடியும்."
— A.W. Tozer

ஜெபம்

புதிதாக ஆண்டவரை அறிந்து வரும் விசுவாசிகள் விசுவாசத்தில் வளரும் போது அவர்களுக்கிடையே நுழைந்து விசுவாசத்தை கெடுக்கும் கள்ள உபதேசத்தை கொடுக்கும் போலிகள் நமது திருச்சபைகளை விட்டு அகல ஜெபிப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878