Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
4 ஜூன் 2026 வியாழன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

திரித்துவ தேவன் தரும் ஆவிக்குரிய ஆசீர்வாதம்

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”

— எபேசியர் 1:3

பரலோக ஆசீர்வாதங்கள் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைவிட உயர்ந்தவை; ஏனெனில் அவை காலத்தால் அழியாதவை, நித்தியத்தை நோக்கிச் செலுத்துபவை

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 1வது அதிகாரம் 3 ம் வசனத்தில், கிறிஸ்தவ வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறார்.

உலகம் ஆசீர்வாதம் என்றால் செல்வம், பதவி, உடல்நலம், வெற்றி போன்றவற்றையே நினைக்கிறது.

ஆனால் தேவன் நமக்குத் தரும் மிக உயர்ந்த ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் ஆகும்.

இந்த வசனத்தில் திரித்துவ தேவனின் செயல்பாடு தெளிவாகக் காணப்படுகிறது:

பிதாவாகிய தேவன் ஆசீர்வாதத்தின் மூலாதாரம்.

குமாரனாகிய கிறிஸ்து அந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வழி.

பரிசுத்த ஆவியானவர் அந்த ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் அனுபவமாக மாற்றுகிறவர்.

எபேசியர் 1-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால், கீழ்காணும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் காணலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாக இருப்பது (1:4)

தேவனுடைய குடும்பத்தில் தத்தெடுக்கப்படுவது (1:5)

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படுவது (1:7)

பாவ மன்னிப்பைப் பெறுவது (1:7)

பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்படுவது (1:13)

நித்திய சுதந்தரத்திற்கான நம்பிக்கையைப் பெறுவது (1:14)

இவை அனைத்தும் அழிந்துபோகும் உலகப் பொருட்கள் அல்ல; நித்தியமான பரலோகச் செல்வங்கள்.

இன்றைய உலகில் பலர் வெளிப்புற ஆசீர்வாதங்களைத் தேடி ஓடுகின்றனர். ஆனால் தேவன் முதலில் நமக்கு அளிப்பது உள்ளத்தை மாற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே.

பணம் நமக்கு பாதுகாப்பைத் தரலாம்; ஆனால் தேவனுடைய சமாதானத்தைத் தர முடியாது.

கல்வி அறிவைத் தரலாம்; ஆனால் இரட்சிப்பைத் தர முடியாது.

மனிதர்கள் அன்பைக் காட்டலாம்; ஆனால் தேவனுடைய பிள்ளை என்ற அடையாளத்தை வழங்க முடியாது.

நாம் பெற்றிருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்த்து, பவுலைப் போலவே "பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று நன்றியுடன் வாழ்வோம்.

திரித்துவ தேவன் நமக்காகத் திட்டமிட்டு, நம்மை மீட்டு, நம்முள் வாசம்பண்ணி, நித்திய மகிமைக்குத் தயார்படுத்துகிறார்.

நாம் தேவனிடத்தில் பொருளாதார ஆசீர்வாதங்களை மட்டுமே தேடுகிறோமா?, அல்லது அவர் ஏற்கனவே நமக்கு கொடுத்துள்ள ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை உணர்ந்து நன்றியுடன் வாழ்கிறோமா?

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878