Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
26 மே 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

பெந்தெகொஸ்தே நாள் அற்புதமும், இன்றைய சவாலும்

வேதப் பகுதி: அப்போஸ்தலர் 2:1-8

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பெந்தெகொஸ்தே நாளில், எருசலேமில் கூடியிருந்த 15-க்கும் மேற்பட்ட தேசங்களைச் சேர்ந்த மக்கள் (இன்றைய ஈரான், ஈராக், துருக்கி, எகிப்து, இத்தாலி போன்ற பகுதிகள்), படிப்பறிவில்லாத கலிலேய சீஷர்கள் தங்களது சொந்த தாய்மொழிகளில் (ஜென்ம பாஷைகளில்) கர்த்தரின் மகத்துவங்களைப் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தனர். அன்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு சபையில் இணைந்தனர்.

அன்று ஆவியானவர் மொழிகளைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதே சுவிசேஷத்தை உலகிற்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு சில முக்கிய சவால்கள் உள்ளன:
மொழி மற்றும் கலாச்சாரத் தடைகள்:
இன்றும் உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகமம் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. நவீன உலகிலும் பல பழங்குடி மக்களுக்கும், குறிப்பிட்ட கலாச்சாரத்தினருக்கும் புரியும் மொழியில் (அவர்களது இதயத்தின் மொழியில்) சுவிசேஷத்தைக் கொண்டு சேர்ப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

மக்களிடையேயான பிரிவினைகள்:அன்று வெவ்வேறு தேசத்து மக்களை ஆவியானவர் கிறிஸ்துவின் அன்பிற்குள் ஒன்றிணைத்தார். ஆனால் இன்று, ஒரே மொழி பேசும் விசுவாசிகளுக்குள்ளும், சபைகளுக்குள்ளும் சாதி, இனம், அந்தஸ்து மற்றும் கோட்பாட்டு ரீதியான பிரிவினைகள் (Denominations) இருப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஆவிக்குரிய வல்லமையின் குறைவு: அன்று சீஷர்கள் பரிசுத்த ஆவியின் பலத்தினால் நிரம்பி தைரியமாகப் பேசினர். இன்று பல கிறிஸ்தவ வட்டாரங்களில் ஆவிக்குரிய ஆழத்தை விட, சடங்காச்சாரங்களும் (Rituals) ஆடம்பரங்களுமே பிரதானமாக இருக்கின்றன. ஆவியானவரின் உண்மையான வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது இன்றைய தலைமுறைக்கு சவாலாக மாறியுள்ளது.

அன்று மக்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்க ஆவலோடு கூடிவந்தார்கள். இன்று தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்கள் மற்றும் உலகப்பிரகாரமான ஈர்ப்புகளினால், மனிதர்களுடைய கவனம் ஆவிக்குரிய காரியங்களை விட்டு எளிதில் சிதறிவிடுகிறது.

அன்று சீஷர்கள் ஆவியானவரின் துணையோடு உலகையே தலைகீழாக மாற்றினார்கள். இன்று நாமும் நம்மிடையே உள்ள பிரிவினைகளை மறந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே, நம் தலைமுறைக்குச் சுவிசேஷத்தை தகுந்த சவால்களுடன் கொண்டு சேர்க்க முடியும்.

ஜெபம்

ஜாதி, மத, மொழ, இன வேறுபாடுகளை களைந்து அனைவருக்கும் தேசம் முழுவதும் நற்செய்தியை சுமந்து செல்லும் மிஷனரி இயக்கங்கள் வாயிலாக நற்செய்தி பணிகள் தேசத்தில் வளர்ச்சி அடைய ஜெபிப்போம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878