சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தும் பரிசுத்த ஆவி
“சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தும் பரிசுத்த ஆவி”
— யோவான் 16:13
“சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” என்று இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நமக்கெல்லாருக்கும் பெரிய ஆறுதலாக இருக்கிறது.
உண்மை வழி எதுவென குழப்பத்தோடு இருக்கும் மனக்குலத்திற்கு, உண்மை வழியை காண்பிக்கும் ஒளியாக பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து அறிமுகப்படுத்துகிறார். உலகத்தின் சத்தங்களும், மனித ஞானங்களும் மத்தியில் எது சத்தியம் என்பதை அறிய முடியாமல் மனிதன் தடுமாறுகிறான். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சித்தத்தை நமக்குத் தெளிவுபடுத்தி, சரியான பாதையில் நடத்துகிறார்.
“சகல சத்தியத்திலும் நடத்தும் பரிசுத்த ஆவியானவர்” என தம் சீடர்களுக்கு, தமக்குப் பின்னும் அவர்களை வழிநடத்த பரிசுத்த ஆவியை அளித்த ஆண்டவர், அவர் ஆளாகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நமக்கும் அதே பரிசுத்த ஆவியைத் தந்து பலப்படுத்துகிறார்.
நம் எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தி, எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் ஞானத்தையும் அளிக்கிறார். பயமுள்ள இடத்தில் தைரியத்தையும், குழப்பமுள்ள இடத்தில் தெளிவையும், பலவீனமுள்ள இடத்தில் பலத்தையும் அளிக்கிறார்.
ஆகையால், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையே சத்தியமும் சமாதானமும் நிறைந்த உண்மை வழிக்கு செல்லும் வாழ்க்கையாகும்.
ஜெபம்
தற்போது நடைபெற்று வரும் விடுமுறை வேதாகம பள்ளி வாயிலாக ஏராளமான சிறுவர்கள் கர்த்தருக்குள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நற்செய்தியால் தொடப்படவும், கர்த்தருடைய சத்தியத்திற்குள் நடத்தப்படவும், பரிசுத்த ஆவியின் வல்லமையை தரித்துக் கொள்ளவும் ஜெபிப்போம்.