UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
9 மே 2026
சனி
உயிர்த்தெழுதல் காலம்
ஜெபத்தில் என் சந்தேகங்கள் மறையும்
ஜெபத்தில் நான் உயிர்ச்சக்தி பெறுகிறேன்.
ஜெபத்தால் நான் கிறிஸ்துவுக்குள் ஒரு புது மனிதனாகுகிறேன் (2 கொரிந்தியர் 5:17).
நான் ஜெபிக்கும் போது இருள்சூழ் பள்ளத்தாக்கு மறைவதில்லை; ஆனால் இறைவேண்டலோடு என்னால் அந்த பள்ளத்தாக்கு வழியாக நடக்க முடியும் ( சங்கீதம் 23:4).
நான் ஜெபிக்காத நாள் கிறிஸ்துவுடன் உள்ள அனுபவத்தில் இழப்பின் ஒரு நாள்.
நம்மால் வியத்தகு இறைவேண்டல்களை ஏறெடுக்க முடியும்;
ஆனால் இறைவேண்டலுடன் கூடிய வாழ்வு வாழ்வது எளிதானது அல்ல.
இயேசுவே,
ஒரு தாய் குழந்தைக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது போல, எங்களுக்கு முறையாக இறைவேண்டல் செய்ய கற்றுத் தாரும்.
தனக்காக அல்ல பிறருக்காகவும் ஜெபிப்பவரே உண்மை கிறிஸ்தவ வாழ்வு வாழ்பவர்.
அருட்பணிகளுக்காக, தேசத்திற்காக, வியாதியில் வாடுவோருக்காக, பலவித தேவைகளில் இருப்பவருக்காக, ஒடுக்கப்பட்டோருக்காக ஜெபிப்போம்.