Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
11 மே 2026 திங்கள் உயிர்த்தெழுதல் காலம்

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம்…

“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.”

— லூக்கா 24:47

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு கொடுத்த மிக முக்கியமான செய்தியின் சாராம்சம் இந்த வசனம். இதில் இரண்டு முக்கிய உண்மைகள் உள்ளன: மனந்திரும்புதல் மற்றும் பாவமன்னிப்பு.
மனந்திரும்புதல் என்பது தவறான வாழ்க்கையை விட்டுவிட்டு தேவனை நோக்கித் திரும்புவதாகும். அப்படி மனம் மாறி வருகிறவர்களுக்கு, இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் பாவமன்னிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த நற்செய்தி எருசலேமில் தொடங்கி இன்று உலகமெங்கும் உள்ள அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும். இது மனித சக்தியால் அல்ல, இயேசுவின் வல்லமையான நாமத்தினாலேயே அறிவிக்கப்படுகிறது. ஜாதி, மதம், இனம் என்ற எல்லாவற்றையும் தாண்டி எல்லோருக்கும் இந்த இரட்சிப்பின் நற்செய்தி அறிவிக்கப்பட்டாக வேண்டும்.

பாவத்திலிருந்து விடுதலையும், தேவனோடு சமாதானமான உறவும் இயேசுவின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.

ஆகையால் நாம் மனந்திரும்பி, “கிறிஸ்துவின் நாமத்தில் மன்னிப்பு உண்டு” என்ற இந்த மகிழ்ச்சியான நற்செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிப்போம்.

God never tires of forgiving us; we are the ones who tire of seeking His mercy.”

“இறைவன் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வதில்லை; அவருடைய இரக்கத்தை நாடுவதில்தான் நாம் சோர்ந்து போகிறோம்.- Pope Francis

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878