Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
15 ஏப்ரல் 2026 புதன் உயிர்த்தெழுதல் காலம்

விசுவாசம்: காணாததை நம்பும் உறுதி

“அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.”

— யோவான் 20:29

தோமாவிடம் இயேசு கூறிய வார்த்தைகள் வெறும் அறிவுரை அல்ல, அது ஒரு மாபெரும் ஆசீர்வாதம்.
காயங்களைத் தொட்டுப் பார்த்து நம்புவது யாராலும் முடியும். காணாததை நம்புவது விசுவாசத்தின் உச்சம். கிறிஸ்து நம் இதயத்தில் வாசம் பண்ணுகிறார் என அவர் இருப்பை உணர்வது தான் பாக்கியம்.

புனித அகஸ்டின் விசுவாசத்தை குறித்து விளக்கும்போது:

"விசுவாசம் என்பது நாம் எதைக் காணவில்லையோ அதை நம்புவது; அந்த நம்பிக்கையின் பலன் நாம் எதை நம்புகிறோமோ அதைக் காண்பது" என்கிறார்.

(“Faith is to believe what you do not see; the reward of this faith is to see what you believe” )

கர்த்தரை காண வேண்டுமெனில் முதலில் நாம் அவரை விசுவாசிப்போம், அற்புதம் அதிசயம் நடந்தால் தான் விசுவாசிப்பேன் என்பது காயத்தை கண்டு விசுவாசிப்பேன் என்கின்ற தோமாவின் குணத்தை போன்றது.

விசுவாசம் என்பது விதை. உணர்ந்து கொள்ளுதல் என்பது அதன் கனி.

காண முடியாவிட்டாலும் விசுவாசிப்பதற்கு திரள் கூட்டம் காத்திருக்கிறது. அறிவிப்பதற்கு ஆட்கள் இல்லை.

கிறிஸ்துவை அறிவித்து வாழ்வது நமது வெற்றியுள்ள வாழ்வு.
அறிவிப்பதற்கு தங்களை அர்ப்பணித்து பணிச்செயும் மிஷனரிகளுக்காய், மிஷினரி ஸ்தாபனங்களுக்காய் ஜெபிப்போம் .

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878