UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
27 மார்ச் 2026
வெள்ளி
தவக்காலம்
பாக்கிய வசனம் 5
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.”
— மத்தேயு 5:7
இரக்கமுள்ளோர் பாக்கிய வான்கள்- ஆம்,
கர்த்தருக்கே கடன் கொடுக்கும் பாக்கியம் பெற்றவர்கள் இரக்கமுள்ளோரே (நீதிமொழிகள் 19:17)
பலியை விட
நீங்கள் தரும் கடனையே ( இரக்கத்தையே) விரும்புகிறேன் என கடவுளே கேட்கும் போது இரக்கத்தை தவிர்ப்பது நியாயமா?
கர்த்தரை கனம் பண்ணுவதற்கும் இரக்கமே சிறந்த வழி (நீதிமொழிகள் 14:31)
தீங்கு நாளில் கர்த்தரால் விடுதலை பெறுவதற்கும் இரக்கமே வழி(சங்கீதம் 41:1)
இரக்கம் இல்லாதோருக்கு இரக்கம் இல்லா நியாய தீர்ப்பாம் (யாக்கோபு 2:13)
ஆதலால் இரக்கம் கொள்வோம், இரக்கத்தின் அதிபதி கர்த்தரிடமிருந்து இரக்கம் பெறுவோம்.