UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
13 மார்ச் 2026
வெள்ளி
தவக்காலம்
மூன்றாம் கற்பனை
“உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”
— யாத்திராகமம் 20:7
பரிசுத்த நாமம்
வானாதி வானம் ஆளும் வல்லவரின் நாமம்,
வையகம் போற்றும் உன்னத பரிசுத்த நாமம்,
விளையாட்டுப் பேச்சில் வீணாய் வழங்காமல்,
விழிப்போடு அதைக் காப்போம்,
ஏளனச் சிரிப்பும், கிண்டலின் மொழியும்,
எம்பெருமான் நாமத்தை இழிவு செய்யலாமோ?
பொய்மையும் வஞ்சமும் நிறைந்த வாயினால்,
பரிசுத்தரின் பெயரைச் சத்தியம் செய்யாமல்,
உன்னத நாமத்தை இலகுவாய் எண்ணி இடறிப் போகாமல்,
இதய பீடத்தில் ஏற்றித் துதிப்போம்,
அஞ்சும் பயபக்தி நிறைந்த நெஞ்சத்தோடு,
அகிலமும் வியக்க அவர் மகிமை உயர்த்துவோம்,
நித்திய வாழ்வு நிச்சயம் நமக்கே.