UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
12 மார்ச் 2026
வியாழன்
தவக்காலம்
இரண்டாம் கற்பனை
“மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;”
— யாத்திராகமம் 20:4
உண்மையான ஆராதனை
பல்லுயிர் படைத்த பரம்பொருள் அவர்,
விந்தைமிகு தேவன்,
சுற்றும் திசையெங்கும் நிறைந்திருக்கும் தூயவர்,
உடைந்த இதயமே அவருக்கு உகந்த பலிபீடம்,
உண்மை ஆராதனையே அவர் வாழும் இருப்பிடம்.
சிந்தையில் தூய்மை, செய்கையில் நேர்மையோடு,
சிந்தும் கண்ணீரில் தெரியும் அவர் மேன்மை,
உருவம் துறந்து உயிராய் உணர்வோம்,
சத்தியத்தோடும், ஆவியிலும் தொழுது பணிவோம், அவர் தரும் ஆசியில் என்றும் மகிழ்வோம்.