UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
11 மார்ச் 2026
புதன்
தவக்காலம்
முதலாம் கட்டளை
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.”
— யாத்திராகமம் 20:3
படைத்தவரே கடவுள்
தன்னை படைத்தவரை அறியாமல்
மண்ணிலே மனநிம்மதி தேடி அலைபவர் பலர்;
கையினால் செய்தவைகளில் கடவுளைத் தேடி
மெய்வழி காண தவிப்பவர் பலர்.
நம்மை உருவாக்கி ஆள்பவர் ஒருவரே,
அவரைத் தவிரப் புகலிடம் வேறில்லை;
“என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் வேண்டாம்” என்ற
இறைவன் குரல் நித்தமும் ஒலிக்கிறது.
படைத்தவர் நம்முடன் இருக்கும்போது
படைப்புகளில் நம்பிக்கை ஏன் ?
அவரை அறிந்தவர் மௌனமாய் நிற்காமல்
அறியாதோர்க்கு உண்மையை அறிவிக்க அழைக்கப்படுகிறார்.
படைத்தவரே கடவுள் —
அவருடனான உறவே
நித்திய வாழ்வின் அடித்தளம்.