UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
9 மார்ச் 2026
திங்கள்
தவக்காலம்
வெற்றியின் ரகசியம்
வெற்றி என்பது வாளின் கூர்மையிலும்
கவசத்தின் பலத்திலும் இல்லை,
இறைவனை நம்பும்
சிறு இதயத்தின் விசுவாசத்தில் தான் உள்ளது.
நினைவில் கொள்வோம் :
சிறு கல் போதும்,
அது
விசுவாசிப்பவனின் கரத்தில் இருந்தால்,
சிறு மனிதன் போதும்,
அவன்
இறைபலத்தில் நின்றால்.
விசுவாசத்துடன் கர்த்தருக்காக வைராக்கிய பலத்துடன் தாவீதைப் போல் எழுவோம்,
அப்போது கோலியாத் விழுவான்.
அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்.
1 சாமுவேல் 17:45