UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
26 பிப்ரவரி 2026
வியாழன்
தவக்காலம்
விசேஷித்தவர்கள் நாம்
சர்வவல்லவரின் வார்த்தையால் உதித்தது வையகம்;
அவரின் விரல் தீண்டலால் உருவாக்கப்பட்டவர்கள் நாம்
சுடர்விடும் சூரியனுக்கு தராத ஜீவசுவாசத்தை,
நம் நாசியில் ஊதி, உன்னதமாய் உயிர்ப்பித்தார்.
உலகம் கட்டளையால் உருவானது;
நாமோ, அவர் கரங்கள் தீண்டி உருவான கவிதை!
அண்ட சராசரங்களைப் படைத்தவரின் மூச்சு நமக்குள்ளே...
நாம் சாதாரணமானவர்கள் அல்ல;
சர்வவல்லவரின் அற்புதப் படைப்பான விசேஷித்தவர்களே
ஆதலால், பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
மத்தேயு 10:31