நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், ..”
— எரேமியா 1:5
நாம் பிறப்பால் தற்செயலானவர்கள் அல்ல, திட்டமிடப்பட்டவர்கள்.
நாம் பிறந்த பிறகுதான் பெற்றோர் நம்மை அறிகிறார்கள். நாம் வளர்ந்த பிறகுதான் நண்பர்கள் நம்மை அறிகிறார்கள். நாம் சாதித்த பிறகுதான் சமூகம் நம்மை கவனிக்கிறது.
நாம் பிறந்து, வளர்ந்து வாழ்வின் தனித்துவ நிலையை அடைந்த பிறகுதான் "இவர் இன்னார்" என்று உலகம் அங்கீகரிக்கிறது.
ஆனால் கர்த்தர் நம்மை உருவாக்குவதற்கு முன்பதாகவே நம்மை குறித்து திட்டம் வைத்து நம்மை உருவாக செய்து நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன் என்கிறார்
நமது அடையாளம் நாம் செய்யும் செயல்களிலோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திலோ இல்லை.
கருவறையில் தசைநார்கள் கூடும் முன்பே நமக்கான "அடையாளம்" பரலோகத்தில் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இந்த உலகம் நம்மை எப்படி நடத்தினாலும், நமது மதிப்பு குறைந்துவிடாது.
அன்புக்குரியவர்களே..
நமது எதிர்காலத்தை அறிய முயற்சிப்பதைவிட, எதிர்காலத்தை முன்பே அறிந்தவரை நம்புவது நலமானது. அவரே நாம் நடக்க வேண்டிய பாதையில் நம்மை நடத்தி பாதுகாப்பவர்.
ஜெபிப்போம்.
UCMSI அருட்பணி இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் அனைத்து அருட்பணிகளுக்காக,
அருட்பணி தேவைகள் சந்திக்கப்பட
அருட்பணியை ஆதரிக்கும் பங்காளர்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட
அருட்பணிகளுக்காய் ஜெபிக்கும் ஜெப வீரர்கள் இன்னும் அதிகமாய் உருவாக