Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
2 ஜூலை 2026 வியாழன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

அழைப்பை மறந்துவிடாதீர்

“அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?”

— ரோமர் 10:14

"திருச்சபை உலகத்தைப் போல ஆக அழைக்கப்படவில்லை; உலகத்தை கிறிஸ்துவிடம் கொண்டு வரவே அழைக்கப்பட்டுள்ளது.

உள்ளேயே முடங்கிக்கிடந்து, தன் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு நோய்வாய்ப்படும் ஒரு திருச்சபையைவிட, தெருக்களில் இறங்கிச் செயல்படுவதால் விபத்துக்குள்ளாகும், காயப்படும், அழுக்கடையும் ஒரு திருச்சபையையே நான் அதிகம் விரும்புகிறேன்.- போப் பிரான்சிஸ்

அன்பானவர்களே,

ரோமர் 10:14 ல் பவுல் அப்போஸ்தலர் எழுப்பும் கேள்விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மட்டுமல்ல, இன்றைய திருச்சபையையும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

இன்று பல இடங்களில் திருச்சபையின் கவனம், இழந்துபோன ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் அழைத்துவருவதைவிட, தனிப்பட்ட ஆசீர்வாதங்கள், வெற்றி, செழிப்பு மற்றும் உலக வாழ்வின் முன்னேற்றம் ஆகியவற்றின் மீது அதிகமாகச் செலுத்தப்படுகிறது.

தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் ஆசீர்வாதம் திருச்சபையின் நோக்கம் அல்ல; அது தேவனுடைய கிருபையின் பலன்.

நற்செய்தியை அறிவிப்பதே திருச்சபையின் முதன்மைப் பணி.

திருச்சபை சுவிசேஷத்தை மறந்துவிட்டு ஆசீர்வாதங்களை மட்டும் தேடத் தொடங்கும்போது, அதன் உண்மையான அழைப்பு மங்கிவிடும்.

இழந்துபோனவர்களுக்காகக் கண்ணீர் சிந்தாத சபை, தனது முதல் அன்பையும் முதல் பணியையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள்" என்று கட்டளையிட்டார்; "ஆசீர்வாதங்களை மட்டும் அனுபவித்துக்கொண்டிருங்கள்" என்று அல்ல.

உலகம் இன்னும் கேட்கத் தயாராக இருக்கிறது. ஆனால் சொல்லத் தயாராக இருக்கும் சாட்சிகள் தேவைப்படுகிறார்கள்.

எனவே, திருச்சபை மீண்டும் தனது அழைப்பிற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது.

ஆகையால், நமக்குக் கொடுக்கப்பட்ட மகத்தான பொறுப்பை உணர்ந்து, நற்செய்தியைத் தைரியமாக அறிவிப்போம்.
அதுவே திருச்சபையின் அடையாளம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878