Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
1 ஜூலை 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

வெட்கப்படுத்தாத விசுவாசம்

“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.”

— ரோமர் 10:11

நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகள் நமக்கு எதிராக மாறி, மனிதர்கள் நம்மை கைவிட்டு, உலகத்தின் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறோம் என்று தோன்றும் போதெல்லாம் நம்மைத் தாங்கிப்பிடிக்கும் உன்னத நம்பிக்கை இந்த வார்த்தைதான்.

கர்த்தர் மேல் நாம் வைக்கும் விசுவாசம் என்பது ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல; அது எல்லாமே முடிந்துவிட்டது என்று உலகம் சொல்லும்போதும் தேவனுடைய வார்த்தையை மட்டும் நம்பி அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் - சி. எச். ஸ்பர்ஜன்

மனிதர்களின் அன்பும் வாக்குறுதிகளும் மாறலாம், ஆனால் "எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை" (ஏசாயா 49:23) என்ற கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை.

அன்று அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்த பக்தர்களின் முகங்கள் எப்படி வெட்கப்பட்டுப் போகவில்லையோ (சங்கீதம் 34:5), அப்படியே இன்று நமது விசுவாசமும் ஒருநாளும் கைவிடாது.

தேவன் உங்களை ஒரு புயலுக்குள் நடத்துகிறார் என்றால் அவர் உங்களை அங்கே மூழ்கடிக்க மாட்டார், மாறாக உங்களைச் சுத்திகரித்து உயர்த்தவே செய்கிறார்-பில்லி கிரஹாம்

அன்பர்களே ...

உலகம் உங்களை அவமானப்படுத்த நினைக்கும் போது, கர்த்தர் உங்களை உயர்த்த நினைப்பார். கர்த்தர் மேல் உங்கள் விசுவாசம் இருக்குமட்டும் அவமானம் ஒருபோதும் உங்களை நெருங்குவதில்லை.

உலகம் உங்களைத் தாழ்த்த நினைத்தாலும், "என் விசுவாசம் என்னை வெட்கப்படுத்தாது" என்ற தைரியத்தோடு கர்த்தரை நம்பி முன்னேறுங்கள், முடிவு எப்போதும் ஜெயமே.
நாம் சந்திக்கின்ற இந்த புதிய மாதம் நமக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருக்க ஆண்டவர் நமக்கு உதவி செய்வார்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878