Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
30 ஜூன் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

தேவனுடைய பிரசன்னமே நம் அடையாளம்

“தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.”

— சகரியா 8:23

நூறு பேரில் ஒருவர் வேதாகமத்தை வாசிப்பார்; மற்ற தொண்ணூற்றொன்பது பேர் ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையைத்தான் வாசிப்பார்கள்.
— D. L. Moody

கடவுளுடைய மக்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து, எருசலேம் ஆலயத்தை மறுபடி கட்டிக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் தான் இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. அன்று சோர்ந்து போயிருந்த யூதர்களுக்கு இது ஒரு மாபெரும் நம்பிக்கையின் செய்தி.

இன்று நமக்கும் இது ஒரு உன்னதமான பாடமாக இருக்கிறது

ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி, மக்கள் அவரது திறமையைப் பாராட்டுவதில் இல்லை; "தேவன் இவரோடு இருக்கிறார்" என்று உணர்வதில்தான் இருக்கிறது.

சகரியா 8:23-ல் 10 புறஜாதியார் ஒரு யூதனைப் பற்றிக்கொண்டார்கள். காரணம், அவன் பெரிய மனிதன் என்பதல்ல; தேவனுடைய பிரசன்னம் அவனுடைய வாழ்க்கையில் வெளிப்பட்டது.

இன்றும் உலகம் நமது பிரசங்கங்களை விட நமது வாழ்க்கையைத்தான் கவனிக்கிறது. நாம் பேசும் வார்த்தைகளைவிட, நாம் வாழும் வாழ்க்கை சத்தமாகப் பேசுகிறது.

நம்முடைய வாழ்க்கையைப் பார்த்து மக்கள் கிறிஸ்துவைத் தேடத் தொடங்கினால், அதுவே உண்மையான சாட்சி.

நம் வாழ்க்கையைப் பார்த்து மக்கள் "இவர் ஒரு நல்ல மனிதர்" என்று மட்டும் சொல்கிறார்களா? அல்லது "தேவன் இவரோடு இருக்கிறார்" என்று உணர்கிறார்களா?

ஜெபம்

உன்னத கடவுளை உலகிற்கு உணர்த்தும் ஊழியர்கள் எழும்பிட ஜெபிப்போம்.

உலகில் வாழும் மக்கள் நம்மில் உன்னதரின் பிரசன்னத்தை காண நம்மை அர்ப்பணிப்போம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878