Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
12 ஜூன் 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

உண்மையின் சாட்சி

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது...”

— யோவான் 8:14

பரிசேயர்கள் இயேசுவின் சாட்சியை நிராகரித்தபோது, இயேசு தாம் கூறும் சாட்சி உண்மையானது என்று உறுதியாக அறிவித்தார். ஏனெனில் அவர் தமது தோற்றத்தையும், தமது இலக்கையும் அறிந்திருந்தார். மனிதர்கள் வெளிப்புறத்தைப் பார்த்து தீர்மானிக்கிறார்கள்; ஆனால் இயேசு பரலோகத்திலிருந்து வந்தவரும், மீண்டும் பிதாவிடத்திற்குப் போகிறவருமாய் இருந்தார்.

உண்மைக்கு ஆதரவாளர்கள் தேவைப்படுவதில்லை; உண்மையில் நிலைத்திருக்கும் மனிதர்களே தேவைப்படுகிறார்கள்."- பெனின்

1. உண்மை தன் அடையாளத்தை அறிந்திருக்கும்

இயேசு, "நான் எங்கேயிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று அறிந்திருக்கிறேன்" என்றார். உண்மையில் வாழ்பவர்கள் தாங்கள் யாருடையவர்கள், எதற்காக வாழ்கிறார்கள் என்பதை அறிந்திருப்பார்கள். தேவனுடைய பிள்ளைகளும் தங்கள் அழைப்பையும் இலக்கையும் அறிந்து வாழ வேண்டும்.

2. உண்மை மனித அங்கீகாரத்தை சார்ந்ததல்ல

பரிசேயர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இயேசுவின் சாட்சி உண்மையாகவே இருந்தது. உண்மை என்பது பெரும்பான்மையினரின் கருத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை; அது தேவனுடைய வார்த்தையால் உறுதிப்படுத்தப்படுகிறது. உலகம் உண்மைக்கு சாட்சி தேடும் கிறிஸ்து தன்னைத்தான் சான்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்

3. உண்மையின் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம்

இயேசு உண்மையின் சாட்சியாக இருந்தது போல, அவருடைய சீஷர்களும் இந்த உலகில் உண்மைக்கு சாட்சியாக இருக்க வேண்டும். வார்த்தையிலும், நடத்தையிலும், வாழ்க்கையிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தும்போது நாம் உண்மையின் சாட்சிகளாகிறோம்.
உலகம் உண்மையை மறுத்தாலும், உண்மை மாறுவதில்லை.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவே உண்மையின் முழுமையான சாட்சி. அவரை அறிந்து, அவரைப் பின்பற்றி, அவருக்குச் சாட்சியாக வாழ்வதே விசுவாசியின் அழைப்பு.

"உண்மையை அறிந்தவன் தைரியமாகப் பேசுவான்; உண்மையில் வாழ்கிறவன் தன் வாழ்க்கையாலேயே சாட்சி கொடுப்பான்.

ஜெபம்

உண்மை வழி எதுவென்று அறியாமல் மனம் போன போக்கில் வாழும் மாந்தர்கள் உண்மையின் வழியை அறிந்து கொள்ள சத்தியத்தை அறிவிக்க பாடுபடும் அருட்பணியாளர்களுக்காக, மிஷனரி இயக்கங்களுக்காக, திருச்சபைகளுக்காக, ஜெபிப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878