Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
3 ஜூன் 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

கிறிஸ்துவுக்குள் சுதந்திரவாளிகள் – திரித்துவ அன்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

“தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.”

— எபேசியர் 1:12

எபேசியர் முதல் அதிகாரம், திரித்துவ தேவனின் இரட்சிப்புத் திட்டத்தை ஒரு அழகிய ஓவியமாக நமக்குக் காட்டுகிறது.

பிதாவாகிய தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார் (எபே. 1:4),

குமாரனாகிய கிறிஸ்து தமது இரத்தத்தினால் நம்மை மீட்டார் (எபே. 1:7),

பரிசுத்த ஆவியானவர் நம்மை முத்திரையிட்டு உறுதிப்படுத்தினார் (எபே. 1:13). எனவே, நமது இரட்சிப்பு மனித முயற்சியின் விளைவு அல்ல; திரித்துவ அன்பின் பரிசாகும்.

இந்தத் தேர்ந்தெடுத்தல் ஒரு சலுகை மட்டுமல்ல; அது ஒரு அழைப்பும் ஆகும். தேவன் நம்மை உலகத்தின் வழியில் செல்ல அல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையான சுதந்திரவாளிகளாக வாழ அழைத்திருக்கிறார்.

இந்த சுதந்திரம் பாவம் செய்யும் உரிமையல்ல; பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று தேவனுக்காக வாழும் அழைப்பு.

அதனால்தான் இயேசு, "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36) என்று கூறினார்.

இன்றைய உலகம் சுதந்திரத்தை கட்டுப்பாடற்ற வாழ்க்கையாகப் புரிந்துகொள்கிறது. ஆனால் வேதாகமம் சுதந்திரத்தை, தேவனுடைய அன்பிலும் சித்தத்திலும் வாழும் வாழ்க்கையாகக் காண்பிக்கிறது.

மீனுக்கு நீரில் இருப்பதே சுதந்திரம்; பறவைக்கு ஆகாயத்தில் பறப்பதே சுதந்திரம். அதுபோல மனிதனுக்கு கிறிஸ்துவுக்குள் வாழ்வதே உண்மையான சுதந்திரம்.

திரித்துவ அன்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம், நமக்காக மட்டுமல்ல, தேவனுடைய மகிமைக்காக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

"நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, அரசருக்குரிய ஆசாரியக்கூட்டம்" (1 பேதுரு 2:9) என்ற வசனம், தேர்ந்தெடுத்தலின் நோக்கம் உலகிற்கு தேவனின் ஒளியைப் பிரதிபலிப்பதே என்பதை நினைவூட்டுகிறது.

ஆகவே, திரித்துவ அன்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திரவாளிகளாக, பிதாவின் கிருபையை நினைவுகூர்ந்து, குமாரனின் மீட்பில் மகிழ்ந்து, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில் நடப்போம். அப்போது நமது வாழ்க்கை தேவனுடைய சுதந்தரமாகவும், அவரது மகிமையை வெளிப்படுத்தும் சாட்சியாகவும் மாறும்.

தேவன் நம்மை உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்தது உலகைவிட்டு விலகுவதற்காக அல்ல; உலகை மாற்றும் ஒளியாக இருப்பதற்காக." – John Stott

ஜெபம்

பல்வேறு அடிமைத்தனங்களில் இருக்கின்ற மக்கள் உண்மையான சுதந்திரத்தைக் காண, சுதந்திரத்தை பறைசாற்றும் அருட்பணியாளர்கள் தைரியமாக கிறிஸ்துவை அறிவிக்க ஜெபிப்போம்

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878