சமாதானத்தை தந்து அருட்பணிக்காய் அனுப்புகிறார்
“இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் ..”
— யோவான் 20:21
உயிர்த்தெழுந்த ஆண்டவர் அஞ்சிக் கிடந்த சீஷர்களுக்குத் தந்த முதல் பரிசு "சமாதானம்". அந்தச் சமாதானம் அவர்களைத் தேற்றுவதற்கு மட்டுமல்ல, அவர்கள் உலகெங்கும் நற்செய்தியைத் தாங்கிச் செல்லும் ஆற்றலாக மாறவே வழங்கப்பட்டது.
பிதா இயேசுவை எப்படி உலகில் அனுப்பினாரோ, அதேபோல நாமும் இன்று கிறிஸ்துவை உலகிற்குப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அனுப்பப்படுகிறோம்.
புனித அன்னை தெரசா குறிப்பிடும்போது
"கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்கும் சிறிய கண்ணாடிகளாக நாம் இருப்போம்." என்கிறார்.
கண்ணாடி தானாக ஒளிர்வதில்லை, அது தன்னிடத்தில் வரும் ஒளியையே பிரதிபலிக்கிறது. நாமும் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குப் பிரதிபலிக்கும் கருவிகளாக அனுப்பப்படுகிறோம்.
கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் ஒளியாக நித்திய வாழ்வை உலகில் அறிமுகப்படுத்தும் ஊடகங்களாக மாறுவோம். அதுவே நம் வெற்றியுள்ள வாழ்வு.
நமது அருட்பணி இயக்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் ஆலய பணிகள் விரைவில் நிறைவடைய, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.