UCMSI
United Christian Missionary Society of India
Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
17 மார்ச் 2026
செவ்வாய்
தவக்காலம்
ஆறாம் கற்பனை
கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:13
இறைவன் தந்த உயிரின் சுடரை
இகழ்ந்து அணைக்கத் துணியாமல்,
மறைமுகக் கோபம் வன்சொல் கொண்டு
மனதைக் கொல்ல நினையாமல்,
பகைமை நீக்கிப் பாசம் காத்தல்
பண்புள்ள மனித அறமாகும்,
சுவாசத்தை நாசியில் ஊதி உயிரைக் கொடுத்தவரின் அன்பை
அகத்தில் சூடி நின்றால்
அனைத்தும் இங்கே சுகமாகும்.