Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
24 பிப்ரவரி 2026 செவ்வாய் தவக்காலம்

நல்ல மேய்ப்பர் கிறிஸ்து

குறையிலா வாழ்வு தரும் மேய்ப்பன் நீர் இருக்க,
குறைவொன்றும் எம்மை அணுகாது;

பசுமைப் புல்வெளிகள் என எம்மைப் பேணி,
பாதுகாப்பாய் வழிநடத்தும் உமது நேசம் பெரிது.

வறண்ட உள்ளத்தின் பாலைநிலத்தில் - உமது
உயிரூற்று என்றும் வற்றாது;

தவறித் தடம் மாறும் பாதையெங்கும் எம்மை
நேர்வழி திருப்பும் உம் கோல் விலகாது.

கார் இருள் சூழ்ந்த காலங்களிலும் - நீர்
தளராத துணையாய் நிற்கின்றீர்;

எதிர்ப்புகள் பெருகும் களத்திலும்
எம்மை
உயர்த்தி மகுடம் சூட்டுகின்றீர்.

இன்றைய நன்மையும் நாளைய ஆசியும் உம்
கிருபையினால் எமக்குக் கிடைத்திடுமே;

நம்பிக்கைச் சுடராய் உமது சந்நிதியில் நாங்கள்
என்றென்றும் நிலைத்து வாழ்வோமே.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878